அடுத்த பொதுக்குழுவில் ஒரே ஒரு தீர்மானம்

 
ddd

இந்த பொதுக்குழுவை பொருத்தவரைக்கும் ஒற்றை தலைமை தீர்மானம் என்பது கிடையாது.  23 தீர்மானங்கள் மட்டுமே  நிறைவேற்றப்பட இருக்கின்றன என்ற நினைப்போடு பொதுக்குழு அரங்கத்திற்கு சென்ற ஓ. பன்னீர் செல்வத்திற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஒரே அதிர்ச்சி.   இந்தப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.  ஆகவே  அடுத்த பொதுக்குழுவினை கூட்டி அதில் ஒற்றைத்தலைமை என்கிற ஒரே ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார்.

cccc

 அவர் மேலும்,  அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2190 பேர் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என்று கையெழுத்திட்ட கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளுக்காக அடுத்தமாதம் பொதுக்குழு நடைபெறுகிறது.  அதை இந்த பொதுக்குழு கூட்ட உறுப்பினர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்றார்.  அதிலிருந்தே தெரிந்தது திட்டமிட்ட இன்று பொதுக்குழுவை நடத்தி,  இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள் என்று.  

இதனால்தான் வைத்திலிங்கம் இந்த பொதுக்குழுவில் இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர புதிதாக எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் கூட சட்டவிரோதமாக இப்படி செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவரும் ஓபிஎஸ் உட்பட ஆதரவாளர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

vv

 அடுத்ததாக பேசிய கேட்பு முனுசாமியும் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டார்கள்.  ஒற்றைத்தலைமை வர வேண்டும் என்கிற ஒரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.   அதனால் அடுத்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தனர்.

jj

 சிவி சண்முகம் மேலும் பேசியபோது,   2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கொடுக்கப்பட்டிருக்கிறது.  இந்த கடிதத்தை விவாதிக்க முன் வைக்கிறோ.ம் இரட்டை தலைமையால் கழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள், சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் பற்றியும்,  ஆளும் திமுக அரசையும் திமுகவையும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் எதிர்த்து செயல்பட முடியாத நிலை இருக்கிறது.   இதனால் கழகத் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

  இரட்டை தலைமையின் செயல்பாட்டால் மிகுந்த சோர்வு ஏற்பட்டிருக்கிறது.   ஆகவே ஒற்றைத் தலைமை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் விரும்புகிறார்கள்.   அதனால் இந்த பொதுக்குழுவில் இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றைத் தலைமை  சம்பந்தமான விவாதித்து முடிவு செய்ய வேண்டும். இந்த பொதுக்குழுவில் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியினையும் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.  இதன் பின்னர்தான் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு ஜூலை மாதம் 11 ஆம் தேதி 9:15 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்தார்.

கேபி முனுசாமியும் அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை எப்படியும் பொதுச்செயலாளர் ஆக்கிவிடுவோம் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.