ஏ.சி. அறையில் அமர்ந்திருந்தால் யாரும் உங்களுடன் சேர மாட்டார்கள்... அகிலேஷ் யாதவை மீண்டும் சீண்டிய கூட்டணி கட்சி தலைவர்

 
எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.. ஓ.பி. ராஜ்பர்

ஏ.சி. அறையில் அமர்ந்திருந்தால் யாரும் உங்களுடன் சேர மாட்டார்கள் என்று அகிலேஷ் யாதவை அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓம் பிரகாஷ் ராஜ்பர் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.


கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. தேர்தலுக்கு பின்பும் இந்த கூட்டணி நீடிக்கிறது. இந்நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலமாக தனது கூட்டணி கட்சி தலைவரான  அகிலேஷ் யாதவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இறந்தது முலாயம் சிங் யாதவ்தான்.. ஆனால் அவர் இவரில்லை… குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மருமகள்

ஓம் பிரகாஷ் ராஜ்பர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஒரு தேர்தலை அவர் (அகிலேஷ் யாதவ்) சொந்தமாக வென்றதை சுட்டிக்காட்ட முடியுமா?. 2012ல் நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முலாயம் சிங் யாதவின் வலுவான தலைமையில் சமாஜ்வாடி போட்டியிட்டது. அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம் சிங் யாதவின் பெரிய ஆளுமை காரணமாக முதல்வராக பதவியேற்றார். அதேசமயம் 2017 சட்டப்பேரவை தேர்தல், 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்கள், தற்போது நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தல்களில் கூட சமாஜ்வாடி கட்சி தோல்வியடைந்தது.

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தனக்கு தானே தீங்கிழைக்கிறது. தேர்தலில் பிரசாரம் செய்யாத கட்சி தலைவர், அந்த கட்சி எந்த தேர்தலில் போட்டியிடும்?. அவர் ஏ.சி. அறைகளை விட்டு வெளியேறி களத்துக்கு செல்ல வேண்டும். ஏ.சி. அறையில் அமர்ந்திருந்தால் யாரும் உங்களுடன் சேர மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதா கடந்த மாதம் ஓம் பிரகாஷ் ராஜ்பர், சமாஜ்வாடி கட்சி தலைவர் ஏ.சி. அறைகளில் இருந்து மிகவும் பழகி விட்டார். அவர் யாரையும் சந்திப்பதில்லை என அவரது கட்சி தலைவர்கள் புகார் கூறுகின்றனர். அவர் அடிக்கடி தொகுதிகளுக்கு செல்ல வேண்டும். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் என்னிடம் தெரிவித்ததை மட்டுமே நான் சொல்கிறேன் என தெரிவித்து குறிப்பிடத்தக்கது.