மம்தா பானர்ஜி முதல் அகிலேஷ் வரை அனைவரும் பிரதமர் ஆசையை வளர்த்து வருகின்றனர்... ஓம் பிரகாஷ் ராஜ்பர்

 
எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.. ஓ.பி. ராஜ்பர்

நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சி முகாமில் யாரும் தயாராக இல்லை, மம்தா பானர்ஜி முதல் அகிலேஷ் வரை அனைவரும் பிரதமர் ஆசையை வளர்த்து வருகின்றனர் என ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஓம் பிரகாஷ் ராஜ்பர் பீகாரிலும் தனது கட்சியை விரிவுப்படுத்த விரும்புகிறார். இந்த சூழ்நிலையில், பீகாரில் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்காவிட்டால், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை தோலுரித்து விடுவேன் என்று ஓம் பிரகாஷ் ராஜ்பர் எச்சரிக்கை செய்து இருந்தார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

இந்நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக நிதிஷ் குமார் குறித்து நான் கூறியவற்றில் உறுதியாக உள்ளேன். உத்தர பிரதேசத்தில் தடையை தாண்டினால்தான் நிதிஷ் குமார் டெல்லியை அடைய முடியும். அவரை (நிதிஷ் குமார்) பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சி முகாமில் உள்ள யாரும் தயாராக இல்லை. 

துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

மம்தா பானர்ஜி முதல் அகிலேஷ் வரை அனைவரும் பிரதமர் ஆசையை வளர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என்னை தூக்கி எறிந்தார். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. உள்பட மாநிலத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்க எனது  கட்சி தயாராக உள்ளது. பீகாரில் 40 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.