பழைய தொடர்புகள்- நள்ளிரவு வரை அசராத பிரதமர் மோடி

 
மோ

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வை தொடங்கி வைத்த பிரதமர் மோடி,  நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார் .  திட்டமிட்டு இருந்ததைவிட காலதாமதம் ஆகிவிட்டது.   இரவு உணவுக்கு பின்னர் அவர் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.  

பிரதமரை சந்திக்க உள்ளே சென்ற பாஜக நிர்வாகிகள் நள்ளிரவு 12 மணி வரை வெளியே வரவில்லை.   12 மணிக்கு மேல்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் வெளியே வந்தனர்.

 அதுவரைக்கும் ஆவலுடன் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை.   இவ்வளவு நேர ஆலோசனையில் என்ன அரசியல் பேசினீர்கள்? என்ற கேள்விக்கு,    ’’பிரதமர் உடனான சந்திப்பில் அரசியல் அதிகமாக பேசவில்லை ’’என்றார்.

அன்ன்

அவர் மேலும்,  ’’அவரிடம் அரசியல் அதிகம் பேசவில்லை.    பிரதமருக்கு தெரியாத அரசியல் இல்லை.  இது தேர்தல் நேரம் இல்லை.  அதனால்  அவர் அரசியல் பேசவில்லை.   நேரம் வரும்போது அரசியல் பேசுவோம்’’ என்கிறார்.

மேலும்,   ’’புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் பிரதமரை பார்த்து ஆசி வழங்கினார்கள். சில தலைவர்கள் குடும்பங்களில் திருமணம் நடந்தது.  அவர்களை பிரதமர் வாழ்த்தினார் .  அடுத்ததாக பழைய தொடர்புகள் , பாலியல் நண்பர்கள் என்று  எல்லாரும் பிரதமரை சந்தித்தார்கள்.  அவர்களுடனான சந்திப்பும் நீடித்தது.   அதனால் அரசியல் அதிகம் பேச முடியவில்லை. பிரதமர் ரொம்ப உற்சாகமாக இருந்தார்.    நடந்த நிகழ்வுகள் பற்றி அவர் பேசினார் .   கட்சியினரின் குடும்பங்கள் குறித்து அவர்  அதிகம் விசாரித்தார்’’ என்கிறார்.

ஆனால், பொன்.,ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் மோடியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.  இதில் அரசியல் அதிகம் இடம்பெறாமல் போயிருக்குமா என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.