நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி- டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன்: ஓபிஎஸ்

 
ops

அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார் என டிடிவி தினகரன் கூறியிருக்கும் கருத்து நல்ல கருத்து அதை வரவேற்கிறோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன்’- ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எந்த நோக்கத்திற்காக அதிமுக சட்ட விதியை எம்ஜிஆர் உருவாக்கினாரோ அதில் எந்த மாசும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக தான் தற்போது நடைபெறும் தர்ம யுத்தம். திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் பயணிக்கும் பாதைகள் வேறு. அதிமுகவில் தொண்டர்களிடையே ஒற்றுமையுள்ளது. ஆனால் தலைமையில் தான் பிரச்சனை உள்ளது என்ற மாயத்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது . அது விரைவில் விலகும்.

அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது. அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி அந்த இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன்” என தெரிவித்தார்.