எடப்பாடி கோட்டையை உடைக்கும் ஓபிஎஸ்! முதலில் அந்த 4 பேருடன் ரகசிய பேச்சு

 
000

ஓபிஎஸ்  தொகுதியிலேயே அதுவும் ஓபிஎஸ் வீட்டுக்கு அருகிலேயே ‘பொதுச் செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிச்சாமி’ என்று போஸ்டர் ஒட்டியது முதற்கொண்டே எடப்பாடி மீது ஆத்திரத்தில் இருந்துவருகிறார் ஓபிஎஸ்.   தனது கோட்டையான தேனி மாவட்டத்திலும் பெரும்பான்மையினரை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்றதும் ஓபிஎஸ்-க்கு இன்னும் கோபம் அதிகரித்திருக்கிறது.   இதனால்தான் அவர் எடப்பாடி கோட்டையை உடைப்பதுதான் முதல் வேலை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

ps

 கட்சியின் நிர்வாகிகளைத் தான் எடப்பாடி விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.   ஆனால் தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று பெரிதும் நம்பும் ஓபிஎஸ் ,   சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு எடுத்திருக்கிறார்.  இந்த சுற்றுப்பயணத்தை அவர் முதலில் கொங்கு மண்டலத்தில் தான் தொடங்குவதாக முடிவெடுத்திருக்கிறார்.  தன் கோட்டையை உடைத்துவிட்ட ஆத்திரத்தில்தான் பழிக்குப்பழியாக  கொங்கு மண்டலம் எடப்பாடியின் கோட்டை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அந்தக் கோட்டையை ஓபிஎஸ் குறி வைத்திருக்கிறார்.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களில் தனது முதல் கட்ட சுற்று பயணத்தை தொடங்க ஓபிஎஸ் முடிவு செய்து இருக்கிறார். இந்த மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்கள் பட்டியலையும் தயார் செய்து வருகிறார்கள். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்- வைத்திலிங்கம் -கோவை செல்வராஜ் ஆகியோர் இதில் முக்கிய பங்கு வைத்து வகிக்கின்றனர். 

va

 ஆதரவாளர்களிடம் இது குறித்து ரகசிய பேச்சை வார்த்தையும் நடத்தி வருகின்றனர்.   அதிமுகவில் ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என்று இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த போது கொங்கு மண்டலத்தில்  ஓபிஎஸ் பின்னால் அணிவகுத்தவர்களை இப்போது தொடர்பு கொண்டு மீண்டும் ஆதரவு திரட்டி வருகின்றார்கள்.  அந்த சமயத்தில் சேலம் மாவட்டத்தில் 24 முன்னாள் எம்எல்ஏக்களும் ஓபிஎஸ்க்கு ஆதரவளித்திருந்தார்கள்.   அந்த 24 பேரில் இரண்டு பேர் காலமாகிவிட்ட நிலையில் மீதம் இருக்கும் 22 பேரில் 18 பேர் இப்போது எடப்பாடி பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.  

இதில்,  ஓபிஎஸ், இபிஎஸ் இருவரின் மோதல் பிடிக்காமல் நான்கு பேர் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது முதற்கட்டமாக அவர்களை தன் பக்கம் இழுக்க ஓபிஎஸ் தரப்பினர் மூயன்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள்,  முன்னாள் எம்பி களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர் ஓபிஎஸ் தரப்பு.   ஆதரவாளர்களை திரட்டிய பின்னர் விரைவில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடியின் கொங்கு கோட்டையில் ஓபிஎஸ் கொடியேற்றுவார், அங்கு ஆதரவாளர்களை சந்தித்து அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று தெரிகிறது.