நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்... ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பரபரப்பு சுவரொட்டி

 
போஸ்டர்

அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

போஸ்டர்

இந்நிலையில் கும்பகோணத்தில் அதிமுக ஒ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டி உள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில், “நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், நடப்பவைகள் நல்லவையாக அமையட்டும், 2024-இல் அம்மாவின் நல்லாட்சி அமைந்திட ஒன்றிணைவோம் என்றும் /
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என நகரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம், ஆர் வைத்திலிங்கம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் படங்கள் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கூட்டிய பொதுக்குழு செல்லாது என ஓபன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.