அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்? பூஜையுடன் தொடக்கம்!

 
e

ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவியை கடந்த பொதுக்குழுவில் பறித்து விட்ட எடப்பாடி,  அடுத்து வரும் பொது குழுவில் பொருளாளர் பதவியையும் பறித்து ஓபிஎஸ்ஐ ஓரங்கட்டி தான் பொதுச் செயலாளர் ஆகி,  ஓபிஎஸ்ஐ அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார்  என்று தகவல் பரவுகிறது.

ஏஎ

 கடந்த 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் செல்லாது என்று எடப்பாடி தரப்பினர் அறிவித்துவிட்டனர்.  இதனால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகிவிட்டது என்று தடாலடியாக சொல்லி விட்டனர்.   கட்சியில் உயர்ந்த அதிகாரம் ஓபிஎஸ் இடம் இருந்தால் உயர்ந்த அதிகாரத்தை பறித்து விட்டாலும்,   அடுத்து அவர் வசம் இருக்கும் பொருளாளர் பதவியும் கட்சியில் முக்கியமான பதவி.  கட்சியின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று துடிக்கும் எடப்பாடி,  அந்தப் பதவிக்கு அடுத்ததாக கட்சியின் முக்கிய பதவி பொருளாளர் பதவி அதிகார மிகுந்தது என்பதை உணர்ந்திருக்கிறார்.  கட்சியின் அறக்கட்டளைகள்,  கட்சி வரவு செலவுகளை கவனிக்க வேண்டிய பணி அது என்பதாலும் அந்த முக்கியமான பொறுப்பு ஓபிஎஸ் வசம் இருப்பதாலும் கட்சியின் சில முக்கியமான கையெழுத்து முக்கியமான விவகாரங்களுக்கு ஓபிஎஸ் கையெழுத்து தேவை இருப்பதால் அந்த பதவியையும் அவரிடம் இருந்து பறித்து விட எடப்பாடி தரப்பு முடிவெடுத்து இருக்கிறது.

சி

 வரும் 11ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக் குழு நடந்தால் அந்த பொதுக்குழுவில்  மாவட்ட செயலாளர்கள் ஆதரவைத் திரட்டி ஓபிஎஸ் பொருளாளர் பதவியை பறிக்கப்போவது உறுதி என்கிறது அதிமுக வட்டாரம்.   அந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை தற்காலிக பொதுச்செயலாளராக கொண்டு வரவும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.   பொருளாளர் பதவியில் ஓபிஎஸ் இருப்பதால்தான் அவர் மீது தற்போது எந்தவித நடவடிக்கையும் கட்சி ரீதியாக எடுக்க முடியவில்லை. அவரின் தயவையும் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது என்பதால் முதலில் அந்த பதவியையும் பறித்து,   அடுத்ததாக  அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கட்சியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளனர்.

ஓஓ

 இது ஒரு புறம் இருக்க பொதுக்குழுவுகான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  இதுவரைக்கும் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் தான் நடந்து வந்தது .  கடந்த பொதுக்குழுவில் களேபரம் ஏற்பட்டதால் அடுத்த கூட விருக்கும் பொதுக்குழுவை ஈசிஆரில் உள்ள விஜிபி ரிசார்ட்டில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் நடந்தன.  ஆனால் திடீரென்று வழக்கம் போல் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திலேயே நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

 வழக்கம் போல் திருமண மண்டபத்தின் உள்ளே பொதுக்குழுவை நடத்தாமல் மண்டபத்திற்கு வெளியே பந்தல் அமைத்து அதில் பொதுக்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.   பந்தல் அமைக்கும் பணி இதற்காக துவங்கப்பட்டிருக்கிறது .  திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் பூஜை போட்டு பந்தல் போடும் பணியை துவக்கி வைத்திருக்கிறார்.   வானகரத்தில் உள்ள அந்த மண்டபத்தின் வாகனங்கள் நிற்கும் இடத்தில் தான் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

 திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்து விட்டால் அதிமுகவிலிருந்து தான் நீக்கப்படுவோம் என்பதை உணர்ந்த ஓபிஎஸ் இதை சமாளிப்பதற்கான வழிகளை ஆலோசித்து வருகிறாராம்.