ஈபிஎஸ் அணியில் இருப்பவர்களுக்கு பதவி வழங்கிய ஓபிஎஸ்! குவியும் புகார்

 
eps ops

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த எடப்பாடி தரப்பினர்களுக்கு ஓபிஎஸ் அணியில் இருந்து புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை வந்ததையடுத்து எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தங்களை கேட்காமலே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய கட்சியினர் இது குறித்து எடப்பாடி பழனிசாமி இடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேல்முறையீடு செய்ய முடியும்: ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்- Dinamani

மேலூர் அருகே நாவினிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமி, குப்பி, தெற்கு தெருவை சேர்ந்த ரகுபதி உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் அணியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க எடப்பாடி அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கள் அணியில் உள்ள கட்சியினருக்கு ஓபிஎஸ் அணியில் எந்த வித விசாரணையும் இன்றி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
ஓபிஎஸ் அணியே தற்போது பயங்கர குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்த எடப்பாடி தரப்பினர், இது போன்று புதிய பொறுப்புகளை வழங்கி கட்சியினை குழப்பத்தில் ஆழ்த்தும் ஓபிஎஸ் அணியினர் மீது தலைமை கழகத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 


இதேபோல் ஈரோட்டை சேர்ந்த ஜெயராமன், தான் இன்னும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இருப்பதாகவும், தன்னை கேட்காமலேயே ஓபிஎஸ் அவரது அணியில் நிர்வாகியாக அறிவித்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக ஓபிஎஸ்க்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.