ஓபிஎஸ் வெளியேறும் வீடியோ காட்சி.. கொண்டாடும் ஆதரவாளர்கள்

 
oo

அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். 

  அதிமுக பொதுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தார். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி இடம் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டது.

vo

இதனால்  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கொதித்தெழுந்தார்.   இது கீழ்த்தரமானது செயல், நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் செயல். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் . திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்து இருக்கலாம் என்று ஆவேசப்பட்டிருந்தார்.  

இதை அடுத்து ஓபிஎஸ் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.   தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.  ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர் .  இதனால் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார்.  வேறு நீதிபதியை நியமிக்கும் படி தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரையும் செய்தார் .

hr

இதன்பின்னர் புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கிலிருந்து விசாரணையில் இருந்து விலகியதை அடுத்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் வலைத்தளங்களில்  தங்களது வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.  பொதுக்குழுவில் இருந்து எடப்பாடி ஆதரவாளர்களால் அதிருப்தி  அடைந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறும் வீடியோ காட்சியையும்,  அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி விலகல் என்ற அறிவிப்பையும் ஒன்றாக பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் புதிய நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில்,  வரும் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில்,  திங்கட்கிழமை நல்ல செய்தி வரும் என்று வேறு  தகவல் பரவுகிறது.