மோடி, அமித்ஷா, நட்டாவுக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்

 
o

குஜராத் மாநிலத்தில் 156 இடங்களில் வென்று பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது.  அம்மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறார் பூபேந்திர பட்டேல். 

 குஜராத் சட்டமன்றத் தேர்தல் நாடெங்கிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா இருவரும்  பிறந்த மாநிலம். அது மட்டுமல்லாமல் பிரதமர் மோடி முதல்வராக குஜராத்தில் பதவி வைத்தவர்.   இந்த வகையில் குஜராத்தின் சட்டமன்றத் தேர்தல் பெறும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. 

 25 ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது.   இந்த முறையும் அதிகாரத்தை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கி இருந்தது.  ஆனாலும் இதில் ஆம் ஆத்மி கட்சி பதவியைப்  பிடித்து விட தீவிரம் காட்டி வந்ததால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என்று குஜராத்தில் மும்முனை போட்டு இருந்து வந்தது. 

t

 கடந்த 1ம் தேதி மற்றும் ஏழாம் தேதி என்று இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில்  இன்று வாக்கிய எண்ணிக்கை நடந்தது.  இதில் பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பெற்றது.  குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.  முதல்வராக உள்ள பூபேந்திர பட்டேல் இரண்டாவது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கிறார். பாஜகவின் இந்த குஜராத் வெற்றியை நாடங்கிலும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.  அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாணியாக இந்த குஜராத் தேர்தல் பெரிதும் கருதப்பட்டது. 

இந்த  நிலையில் குஜராத் தேர்தலில் பாஜக வென்றிருப்பதால் பாஜகவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.   முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

அவர், பிரதமர் நரேந்திர மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு பாஜக  குஜராத்தில் மகத்தான வெற்றிக்காக, அதிக வெற்றி பெற்று தொடர்ந்து ஏழாவது முறையாக சட்டசபை தேர்தலில்  குஜராத் மாநிலத்தில் எந்த சட்டமன்றத் தேர்தலிலும் இல்லாத வகையில் அதிக இடங்களை வென்று வெற்றி பெற்று நல்லாட்சிக்காக வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.