நீர்த்துப் போய்விட்டார் ஓபிஎஸ்; அவரை ஏற்றுக்கொள்ள முடியாது: கறார் காட்டும் கே.பி.முனுசாமி

 
க்ப்

ஓ. பன்னீர்செல்வம் நீர்த்துப் போய்விட்டார்.  அதனால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் கே .பி. முனுசாமி.

 எடப்பாடி அணியில் தீவிரமாக இயங்கி வரும் கே. பி. முனுசாமி,  கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்றும்,  கட்சியில் இருந்து விலக்க ஏன் இத்தனை தீவிரமாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,   ஒரு கட்சியின் தலைவர் பொதுக்குழுவுக்கு வந்து விவாதிக்க வேண்டும்.  ஆனால் பொதுக்குழுவே நடக்க கூடாது என்கிற நோக்கில் செயல்படுகிறார் ஓபிஎஸ்.  

 இதனால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.  சட்டம்  ஒழுங்கு பிரச்சனை வரும் அமைதி காக்க வேண்டும் என்று கடிதத்தில் எழுதுகிறார். நீதிமன்றத்திற்கு செல்கிறார்.  இதெல்லாம் கட்சி விதிகளுக்கு எதிரானது.   பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்பதுதான் ஓ. பன்னீர் செல்வத்தின் எண்ணம். அப்படிப்பட்ட அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்கிறார்.

ஓப்

அவர் மேலும்,   1999 ஆம் ஆண்டு பெண்ணாகரம் பகுதியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஒரு நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னம் முன்பாக நின்றார். அதனால் அவரை கட்சியிலிருந்து நீக்கி கடுமையாக எச்சரித்தார் ஜெயலலிதா.  அந்த தலைமையின் கீழ் இயங்கிய,  அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம்,   ஆளுநர் மாளிகையில் திமுக முதலமைச்சருடன் அமர்ந்து தேநீர் அருந்துவதும் , சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பராசக்தி படம் கதை பேசுவதும்,  ஓ. பன்னீர்செல்வம் மகன் முதலமைச்சரை சந்தித்து ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று சொல்லுவதும்   எல்லாம் வைத்து திமுக அமைச்சரே பொது மேடையில் பேசுகிறார்.

 அதிமுகவைப் பொறுத்தவரை ஓ. பன்னீர்செல்வம் நீர்த்துப் போய் விட்டார்.   அதனால் அவரை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.    பன்னீர்செல்வம் மீது அதிர்ச்சி இருந்ததால்தான் அதிமுகவினர் அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.   எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் இரட்டை தலைமையால் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.   திமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய ஓ.  பன்னீர்செல்வம் மௌனம் சாதிப்பது இந்த இயக்கத்தின் நலன் கருதி ஒற்றைத்தலைமையை முன் நிறுத்துகிறோம் என்கிறார்.