சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி திடீர் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் இரட்டை தலைமையே காரணம் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது .இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தேனியில் ஒபிஎஸ் தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுக இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் அதிமுக சார்பில் எழுந்துள்ளது.
இந்த சூழலில் சசிகலா தென் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை விமான நிலையத்தில் இருந்து சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா சரவணபவன் ஓட்டலில் தங்கி உள்ளார். அங்கு சென்ற ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்து பேசினார்.