எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு அதிரடி! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

 
ee

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஓபிஎஸ் தரப்பு. 

 கடந்த 23ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது.  இந்த பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.   ஆனால் அந்த 23 தீர்மானங்களையும் பொது குழு உறுப்பினர்கள் நிராகரித்ததாக சிவி சண்முகம், கேபி முனிசாமி உள்ளிட்டோர் அறிவித்தார்கள்.

po

 அதுமட்டுமல்லாமல் புதிய முடிவுகள் எதுவும் பொது குழுவில் எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.  அடுத்த பொதக் குழு வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தீர்மானங்களை  நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்ட நீதிமன்றத்தை அனுமதிக்கும் செயல் என்று ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

 இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் பொதுக்குழு மற்றும் செயற்குழு இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.   அதிமுகவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் தனித் தீர்மானம் எதுவும் கொண்டு வரக்கூடாது என்று முறையீடு செய்து அதில் வெற்றி பெற்றது இதே சண்முகம் தான்.

hr

  தற்போது எடப்பாடி தரப்புக்கு எதிராக தாக்கல் செய்திருக்கும் மனுவில்,   பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு மீறப்பட்டிருக்கிறது.   நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது.   அவை தலைவராக தமிழ் மகன் நியமனம் செய்தது என்று  நீதிமன்ற அவமதிப்பு,  11 இல் அடுத்த பொதுக்குழு என்று அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்திருக்கிறார்.