"அதிகாரத்தால் வந்த ஆட்டம்.. அதிமுகவை அழிக்க திட்டம்" - சீறிய ஓபிஎஸ்!

 
ஓபிஎஸ்

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாகக் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்தபோதே சாலை மறியல் வழக்கில் கைதானார். இதில் சாலை மறியல் வழக்கில் ஜாமீன் பெற்றார். ஆனால் முதல் வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தொழிற்சாலையை அபகரித்த புகாரில் மூன்றாம் வழக்கும் அவர் மீது பாய்ந்தது. அடுத்தடுத்து வழக்குகளால் அவர் ஜாமீனில் வெளிவர முடியாதபடி காவல் துறை கிடுக்குப்பிடி போட்டுள்ளது. 

இதனை வன்மையாகக் கண்டித்துள்ள அதிமுக தலைவர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னதாக சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று சந்தித்து பேசினார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்டுப்பாட்டில் இருக்கின்ற காவல்துறையும் இன்று பல்வேறு வகையான, உண்மைக்கு மாறான பொய்யான வழக்குகளை, அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.

tn

எதிர்கட்சியை அழித்துவிட திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. தங்களை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். மேலும், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு திமுக அரசு அச்சுறுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களை திமுகவில் சேரும்படி காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்" என்றார்.