ஓபிஎஸ் பக்கம் வந்த ஈபிஎஸ் அணியினர்! பண்ணை வீட்டில் பரபரப்பு ஆலோசனை
ஓபிஎஸ் பக்கம் வந்த ஈபிஎஸ் அணியினர்! பண்ணை வீட்டில் பரபரப்பு ஆலோசனைஅதிமுகவின் மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக் குழு செல்லாது மற்றும் பொதுச் செயலாளர் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இது தொடர்பாக வரும் 21ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு பதில் அளிக்க நீதிமன்றம் அதுவரை பொதுச் செயலாளர் தடையும் விதித்தது. இந்த சூழலில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த தாராபுரம் நகர அதிமுக செயலாளர் காமராஜ் ,எடப்பாடி அணியில் இருந்து விலகி சுமார் 100 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் வந்து இணைந்தார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், விரைவில் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்து தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.