விரைவில் 50,000 தொண்டர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருவார்- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

 
op

ஜெயக்குமாரை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நேற்று ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஜேடிசி பிரபாகர்,  ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதால் ராயப்பேட்டை பகுதியில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்து இருந்த நிலையில், இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மனு அளித்தார். 

Kolathur D Krishnamoorthy (@_krishnamoorthy) / Twitter

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்கு விரைவில் செல்லவுள்ளதால், அவர் வரும் போது பாதுகாப்பு அளிக்க டிஜிபியை சந்தித்து மனு அளித்துள்ளேன். ஓரிரு தினங்களில் பதிலளிப்பதாக டிஜிபி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, தைரியம் இருந்தால் பொதுக்குழுவை கூட்டி, நிரந்தர பொது செயலாளராக தொண்டர்களை வைத்து தேர்வாகப்பட்டும். பச்சோந்தி போல செயல்பட்டு  முதலமைச்சர் பதவிக்கு வந்த பிறகு,  சொந்த நலனுக்காக கட்சியை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. 

திமுகவுக்கு ஓ.பன்னீசெல்வத்திற்கு கூட்டு என்று சொல்லும் ஜெயக்குமார், அந்த கேள்வியை கே.பி.முனுசாமியிடம் கேட்க வேண்டும். பெட்ரோல் பங்க் வைக்க, நிலம் குத்தகைக்கு எடுக்க திமுகவிடம் விலை போனவர் கே.பி.முனுசாமி தான். விரைவில் 50,000 தொண்டர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவார்” என தெரிவித்தார்.