ஓபிஎஸ் கூட்டும் பொதுக்குழு - ஜெ., ஆலோசகருடன் எடப்பாடி ஆலோசனை

 
ஜொ

மறைந்த முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஆலோசகர் ஜோதியுடன் தீவிர சட்ட ஆலோசனைகள் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஓ

 பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ,பாஜக தேசிய தலைவர் ஜெ. பி .நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.   ஆனால் அவர் டெல்லியில் இருந்த நாட்களில் ஒருவரைக் கூட சந்திக்க அனுமதி கிடைக்காததால் கடுப்பாகி சென்னை திரும்பினார்.  

 அதே நேரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் படுத்திருந்தாலும் டெல்லியில் உள்ள பாஜக மேடத் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் ஓபிஎஸ். அப்போது சில சிக்னல்கள் அவருக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.   இதன் பின்னர்தான் ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிராக போட்டி பொது க்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து வருகிறார்.  புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார் . மாவட்ட செயலாளர்களையும் நியமனம் செய்து வருகிறார் . 

க்ஃப்

பாஜகவை பொறுத்தவரைக்கும் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பின்னர் ஒற்றைத் தலைமையை விரும்பவில்லை என்று தெரிகிறது .  அதனால் தான் சசிகலா அதிமுகவிற்கு ஒற்றை தலைமையாக வந்த போது ஓபிஎஸ்ஐ தர்மயுத்தம் தொடங்க வைத்து சலசலப்பை ஏற்படுத்தியது என்கிறது அதிமுக வட்டாரம்.   இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமையை பாஜக விரும்பவில்லை என்றே தெரிகிறது . 

ஓபிஎஸ் -இபிஎஸ் இருவருமே இணைந்து இருக்க இரட்டை தலைமையில் இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாக தகவல் . அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இடமும் பாஜக மேல்நிலைத் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.   ஆனால் ஓபிஎஸ் உடன் மீண்டும் இணைவதற்கான சாத்தியமே இல்லை என்று எடப்பாடி பிடிவாதமாக இருப்பதால் ஓபிஎஸ்-க்கு சில சிக்னல்கள் கொடுத்திருக்கின்றன பாஜக மேலிடம் என்று தகவல்.   இதன் அடிப்படையில் தான் ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை வைத்து அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக இருக்கும் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி போட்டி பொதுக்குழுவை கூட்ட இருக்கிறார் .  

எப்

அப்படி ஒரு வேளை ஓபிஎஸ் போட்டி பொதுக் குழுவை கூட்டி அதன் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக டி வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி.

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி எப்படி தான் கூட்டிய பொதுக்குழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாரோ அதேபோல் ஓபிஎஸ் போட்டி பொதுக் குழுவை கூட்டி அதன் தீர்மானங்கள்,  பங்கெடுத்து நிர்வாகிகள் விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்தால் அந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தீவிர சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி.

 முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ,  ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞராகவும் ஆலோசராகவும் இருந்த ஜோதியிடம் சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி என்று தகவல்.  

 இந்த சட்ட ஆலோசனைகள் ஓபிஎஸ்ஐ சமாளிப்பதற்கு மட்டுமல்ல ,  பாஜகவின் விருப்பத்தின்படி இரட்டை தலைமைக்கு ஒப்புக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தால் அதனால் பாஜக மூலமாக வரும் சிக்கல்களையும் எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி என்கிறது தகவல்.