ஓபிஎஸ் இபிஎஸ்சை ஒரே மேசையில் அமரவைத்து விருந்து வைத்த ஆளுநர்

 
eo

தள்ளித் தள்ளி அமர்ந்திருந்த ஓபிஎஸ் இபிஎஸ்ஐ ஒரே மேஜையில் அமர வைத்து விருந்து உபச்சாரம் நடத்தி இருக்கிறார் ஆளுநர்.  இது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.    தமிழகத்தின் பாரம்பரிய நடனம் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது.   கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு மரியாதை செய்தார்.  

pp

விழாவில் ஆளுநர் பேசியபோது,   பொங்கல் பண்டிகை தமிழர்களின் பெருமையான பண்டிகை.  கலாச்சாரத்தையும் வீரத்தையும் ஜல்லிக்கட்டு மூலமாக பொங்கல் பண்டிகை வலியுறுத்துகிறது.  இன்று பாரம்பரிய விழாக்கள் ஆளுநர்  மாளிகையில் கொண்டாடப்பட்டதில் இந்த ஆளுநர் மாளிகையை ஒரு தமிழ்நாடு போல இருந்தது என்றார்.

 தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது தான் சரியானது என்று சொன்னதால் திமுக ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனங்களை செய்து வருகின்றார்கள்.   இதனால் சட்டமன்றத்தில் சர்ச்சையாகி ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.   திமுகவும் கெட் அவுட் ரவி என்று கண்டன பிரச்சாரம் நடத்தி வருகிறது .

 இதை எடுத்து ஆளுநர் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு என்பதை தவிர்த்து தமிழ்நாடு இலட்சினை என்பதையும் தவிர்த்து அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.   இதனால் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் ஆளுநர் நடத்திய இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவில்லை.   ஆனால் விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த பேனரில் தமிழ்நாடு அரசு இலட்சணையும் இந்திய அரசின் இலட்சணையும் இடம் பெற்று இருந்தன.   தமிழ்நாடு என்றும் இடம் பெற்று இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

oo

 பொங்கல் விழா முடிந்து விருந்து உபசார நிகழ்ச்சி நடந்தது.   அப்போது ஆளுநர் உடன் முக்கிய அறிவிப்பாளர்கள் நீதி அரசர்கள் அமர்ந்திருந்து உள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வமும் தள்ளித் தள்ளி இருந்த நிலையில் அவர்கள் இருவரையும் ஒரே மேஜையில் அமர வைத்து விருந்து உபச்சாரம் நடத்தினார் ஆளுநர்.    ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தொண்டர்களிடையே இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.