இரவில் தனித்தனியாக பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்

 
oo

 சென்னை வரும் பிரதமர் மோடியை நாளை மறுதினம் இரவு ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியின் தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த சந்திப்புக்கு பின்னால் தான் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் எத்தகைய மாற்ற நிகழும் என்பது தெரிய வரும்.  இதனால் மோடியுடன் நாளை மறுதினம் நடைபெற இருக்கும்  சந்திப்பை அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

p

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியா போட்டியை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.  இதற்காக குஜராத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டு நாளை மறுதினம் சென்னை வருகிறார்.   நேரு விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் பின்னர் இரவு 8 மணி அளவில் அந்த நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்று அன்று இரவு அங்கே தங்குகிறார்.

eeee

 இன்று இரவு 8:30 மணியில் இருந்து முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.  அப்போது பன்னீர்செல்வமும் -எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்கள்.

 இந்த சந்திப்புக்கு பின்னரே ஓபிஎஸ் இபிஎஸ் இருவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றம் இருக்கும் என்பது தெரிய வரும் என்பதால் அதிமுகவினர் நாளை மறு தினத்தின் இரவை அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர்.