ஓபிஎஸ் -200: இபிஎஸ் -200: பாரபட்சம் இல்லாமல் பாய்ந்தது

 
oe

 ஓபிஎஸ் -இபிஎஸ் இருதரப்பிலும் தலா 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது ஏழு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் சம்பவத்தை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

 அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது.   நேற்று சென்னை வானகிரகத்தில் இபிஎஸ் அணியினர் சார்பில் அதிமுக பொதுக்குழு கூடிய நிலையில்,  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.   ஆனால் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று முன்கூட்டியே இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கே குவிந்திருந்தனர்.  மேலும் அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போட்டிருந்தனர்.

எ

 இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ்  ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டனர்.  இதன் பின்னர் எடப்பாடி ஆதரவாளர்களை அடித்து துரத்தி விட்டு அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.   இதனால் அந்த பகுதி முழுவதுமே ஒரே கலவர பூமியாக மாறியது.  பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கை முறிந்தது.

இதை அடுத்து அந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருப்பட்டது.   சட்டம் ஒழுங்கு மோசம் அடைவதை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது .  அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல தடை போடப்பட்டன.  

பொ

 ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் உள்ளே ஆலோசனை நடத்தி வந்த நிலையில் அங்கே மீண்டும் எடப்பாடி ஆதரவாளர்கள் திரண்டு வந்தால் மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாகும் என்பதை உணர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு வணிகவரித்துறை அதிகாரிகள்  பூட்டு போட்டனர்.  பின்னர் ராயப்பேட்டை அலுவலகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.  அங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது .  அது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

 நேற்று நடந்த மோதல் சம்பவத்தில் இபிஎஸ் -ஓபிஎஸ் இருவரின் ஆதரவாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஓபிஎஸ் தரப்பில் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.

 இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் இபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது