சமாஜ்வாடி கட்சி தலைவர் ஏ.சி. அறைகளில் இருந்து மிகவும் பழகி விட்டார்... கூட்டணி கட்சி தலைவர் ராஜ்பர் பேச்சால் பரபரப்பு

 
அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏ.சி. அறைகளில் இருந்து மிகவும் பழகி விட்டார் என சமாஜ்வாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. தேர்தலுக்கு பின்பும் இந்த கூட்டணி நீடிக்கிறது. இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பர், அகிலேஷ் யாதவ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.. ஓ.பி. ராஜ்பர்

சமாஜ்வாடி கட்சி தலைவர் ஏ.சி. அறைகளில் இருந்து மிகவும் பழகி விட்டார். அவர் யாரையும் சந்திப்பதில்லை என அவரது கட்சி தலைவர்கள் புகார் கூறுகின்றனர். அவர் அடிக்கடி தொகுதிகளுக்கு செல்ல வேண்டும். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் என்னிடம் தெரிவித்ததை மட்டுமே நான் சொல்கிறேன். எனது செய்தியை தவறான வழியில் விளக்கக்கூடாது. அதை ஏன் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?. நான் ஏதாவது தவறாக சொன்னேனா? உண்மை கசப்பானது.
 சமாஜ்வாடி
அகிலேஷ் கட்சி தலைவர்கள் என்னிடம், அவர் (அகிலேஷ் யாதவ்) மக்களை சந்திக்கவும், அவரது கட்சியை வலுப்படுத்தவும், அவரை சூழ்ந்துள்ள நவரத்தினங்களை தவிர்க்கவும் நான் அவருக்கு ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். உங்கள் இந்த அறிக்கையால் சமாஜ்வாடி உங்களுடான உறவை முறித்து கொண்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு ராஜ்பர் பதிலளிக்கையில், நான் சொந்தமாக கட்சியை உருவாக்கியுள்ளேன். மேலும் எனது பலத்தில் பணியாற்றுகிறேன். நான் தேவைப்படும் நபர் என்னிடம் தானாகவே வருவார் என தெரிவித்தார்.