சொந்த சித்தப்பாவை கூட அகிலேஷ் யாதவால் கட்டுப்படுத்த முடியவில்லை... ஓம் பிரகாஷ் ராஜ்பர் தாக்கு

 
ராஜ்பர்

சொந்த சித்தப்பா, கொழுந்தியா மற்றும் சொந்த குடும்பத்தை கூட அகிலேஷ் யாதவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஓம் பிரகாஷ் ராஜ்பர் தாக்கினார்.

உத்தர பிரதேசத்தில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை கூட்டணியிலிருந்து வெளியே போங்க என்பதை மறைமுகமாக உங்களுக்கு அதிக மரியாதை கிடைப்பதாக நீங்கள் நினைக்கு இடத்துக்கு செல்ல நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்று அவருக்கு சமாஜ்வாடி கடிதம் எழுதியது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணிக்கு முடிவுக்கு வந்ததாக சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அறிவித்தார்.

அகிலேஷ் யாதவ்

இந்நிலையில் உத்தர பிரதேசம் ஜான்பூரில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகிலேஷ் யாதவ் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. களத்தில் பணியாற்றாமல் ஏசி அறைகளில் இருந்து அகிலேஷ் யாதவ் அரசியல் செய்கிறார். சரி, நான் தவறு என்று அவர் (அகிலேஷ்) கூறுகிறார். ஆனால் சிவ்பால் அவருடைய சித்தப்பா. சொந்த சித்தப்பா, கொழுந்தியா (தம்பி மனைவி) மற்றும் சொந்த குடும்பத்தை கூட அகிலேஷ் யாதவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் என்னை எப்படி நடத்துவார்?. 

அபர்ணா யாதவ்

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடியுடன் எனது கட்சி இனி கூட்டணியில் இல்லை. என் கட்சியில் உள்ள சில தலைவர்கள் நாம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். நானும் தனிப்பட்ட முறையில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேச வேண்டும் என்று கருதுகிறேன். சமீபத்திய அசம்கர் இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சிறப்பாக செயல்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.