சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வந்தது.. ஓம் பிரகாஷ் ராஜ்பர் அதிரடி அறிவிப்பு

 
ராஜ்பர்

சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணிக்கு முடிவுக்கு வந்ததாக சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அறிவித்தார்.

ஓம் பிரகாஷ் ராஜ்பர், சிவ்பால் யாதவ் ஆகியோரை கூட்டணியிலிருந்து வெளியே போங்க என்பதை மறைமுகமாக உங்களுக்கு அதிக மரியாதை கிடைப்பதாக நீங்கள் நினைக்கு இடத்துக்கு செல்ல நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்று சமாஜ்வாடி கடிதம் எழுதியது. இது தொடர்பாக சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சி இன்று விவகாரத்து வழங்கியது. நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். பி.எஸ்.பி. கட்சியே எங்களின் முதன்மையான முன்னுரிமை. 

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்

தலித்துக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக நாங்கள் போராடுகிறோம், அதை தொடர்ந்து செய்வோம். நாங்கள் பா.ஜ.க.வுடன் செல்வது அவசியமில்லை. தலித்துக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக நான் அவருடன் (அகிலேஷ்) கைகோர்த்து போராடினேன். நான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது, அவர்களுக்கு  மோசமானது. ஆனால் அகிலேஷ் யாதவ் முதல்வரை சந்தித்தால் அவர்களுக்கு  நல்லது.  2024க்குள் எல்லாம் தெளிவாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

சிவ்பால் யாதவ், அகிலேஷ் யாதவ்

பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)  தலைவர் சிவபால் டிவிட்டரில், நான் எப்பொழுதும் சுதந்திரமாக இருந்தேன், ஆனால் கடிதம் மூலம் எனக்கு முறையான சுதந்திரம் அளித்ததற்காக சமாஜ்வாடி கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கைகள் மற்றும் மரியாதையில் சமரசம் செய்து கொள்வது அரசியல் பயணத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என பதிவு செய்துள்ளார்.