நாங்கள் தரம் தாழ்ந்தால் திருக்குவளை குடும்பத்தில் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்கள்.. வெடித்த ஜெயக்குமார்

 
j

 திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர்,  சேற்றிலே விழுந்து புரளும் பிராணிகள் அங்கும் இங்கும் ஓடி அனைவர் மீதும் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் சகதிகளை பூசுவது போல் கோபாலபுரம் குடும்பத்தின் கொத்தடிமை ஆர். எஸ். பாரதி என்கிற நாளாந்தர பேர்வழி,  பேட்டி என்கிற பெயரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீது விஷத்தை கக்கி இருக்கிறார்.

rs

 தன்னை ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக் கொள்ளும் அவர் மாண்புமிகு நீதி அரசர்களை பற்றியும் அவர்கள் பதவிகளுக்கு வந்ததே தாங்கள் போட்ட பிச்சை என்றும் ஊடகங்களை வேசி ஊடகங்கள் என்றும் வாய்க்கொழுப்பேறி உளறியவர் ஆர்.எஸ்.பாரதி.   பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எத்தனை வழக்குகளை நடத்தினர் அதன் மூலம் எத்தனை கோடிகளை சம்பாதித்தார்? இதைப்பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதம் நடத்த இந்த நாலாந்தர பேர்வழி தயாரா என்ற கேள்வியை எழுப்பியவர்,  கருணாநிதியிடம் எடுபிடி வேலை செய்து ஒரு சில பதவிகளை பெற்று எப்படி கோடீஸ்வரர் ஆனார் என்பதை உண்மை தி.மு.கவினரை கேட்டாலே தெரியும் என்கிறார்.

 முன்னாள் அதிமுக அமைச்சர்களின்  வீடுகள் அரண்மனை போல் உள்ளது என்றெல்லாம் பிதற்றி இருக்கிறார்.  இவரும் இவருடைய தலைவரும் அவர்களது குடும்பத்தினரும் திமுகவின் முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்களும் குடிசையில வாழ்கின்றார்கள்.   திமுகவைச் சேர்ந்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் வீடுகள் கிலோ மீட்டர் கணக்காக நீண்ட காம்பவுண்ட் சுவர்களைக் கொண்டுள்ளது.  அவர்கள் நடத்தும் கல்லூரிகளையும் தமிழக மக்களே நன்கு அறிவார்கள் என்கிறார்.

es

 நீதான் வீராதி வீரன் சூராதி சூரன் சூரபத்மன் பேரன் என்று மார்தட்டும் நபரை தலைவராக பெற்று இருக்கிறேன் என்கிறாயே.  மக்கள் நலனுக்காக வரிகளையும் கட்டிடங்களையும் உயர்த்தாமல் மக்கள் சுமையை குறைக்க சொல்ல வேண்டியது தானே?  எடப்பாடியார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடுத்து வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டும்  ஆதாரப்பூர்வமானது.   அந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையாக பதில் சொல்ல வக்கற்ற, வகையற்ற, சின்ன புத்தி சின்ன சாமியாக வலம் வந்து கொண்டிருக்கின்ற பாரதி பொத்தாம் பொதுவாக சொல்கிறார்.

 இந்த ஆட்சியின் அவலங்களை நாங்கள் சொல்லும் அதே நேரம் பல மாவட்டங்களில் மனசாட்சி இருக்கும் திமுக தொண்டர்களே வெளிச்சம் போட்டி காட்டி வருகிறார்கள்.  இந்த நாலாந்தர பேர்வழி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுகிறார்.   இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் மிரள்பவர்கள் நாங்கள் கிடையாது.  

 எடப்பாடியாரின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு முறையாக பதில் சொல்ல வக்கில்லாத துண்டு சீட்டு மாமுனி தலைவர்,   ஒரு கூலிக்கு மாரடிக்கிறவரை ஏவி விட்டிருக்கிறார்.   அந்த வாயை எப்படி அடைப்பது என்று எங்களுக்கு தெரியும் என்கிறார் கடுமையாக.

 இந்த விடியா அரசுக்கு எதிராக உண்மைகளை எடுத்து வைப்பவர்களை புழுதி வாரித் தூற்றி,  கலங்கப்படுத்தி,  மிரட்டி வாய் அடைக்க வைக்கலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத் தான் இருக்கும்.   கருத்து மோதலை தவிர்த்து தனிமனித தாக்குதலை பாரதி போன்றவர்கள் தொடர்ந்தால் குட்டி குரைத்து தாய்  தலையில் விழுந்த கதையாகிவிடும் .  அதனால் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனைக்காக போராடும் எங்களை அடக்க நினைக்க வேண்டாம். நாங்கள் தரம் தாழ்ந்தால் திருக்குவளை குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.