சென்னையிலும் எடப்பாடியுடன் சந்திப்பு இல்லையா? ஓபிஎஸ்சுடனும் சந்திப்பு இல்லையா?

 
eம்

பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் 44 வது உலக செஸ் ஒலிம்பியா போட்டியை தொடங்கி வைப்பதற்காக நாளை மாலை குஜராத்தில் இருந்து தனி ராணுவ விமானம் மூலம் சென்னை வருகிறார்.   நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு எட்டு மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கு தங்குகிறார்.  

ப்ப்ப்

 இரவில் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச அவர் திட்டமிட்டு இருக்கிறார்.  இரவு 8:30 மணிக்கு மேல் நடைபெறும் இந்த சந்திப்புகளில்   முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவரும்  தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்கள் என்ற தகவல் இருந்தது.   ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த சந்திப்பு நிகழ வாய்ப்பு இல்லை என்ற பேச்சு எழுந்திருக்கிறது .

அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு  நடத்தலாம்.  ஆனால் விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தீர்ப்பளித்திருந்தது.   அதன்படி கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக் குழு நடந்தது.   எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால  பொதுச் செயலாளர் அந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டது  முதல் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15 ஆம் தேதி அன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இபிஎஸ் தப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஓபிஎஸ் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பின் நியாயத்தை கேட்க வேண்டும் என்று அந்த கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி அமர்வில்  இந்த வழக்கு நாளை 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.   விசாரணையின் போது து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்.

 மேலும் டெண்டர் முறை கேடு ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது.  இதில்,  சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு நீங்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 இந்த நிலையில் பிரதமர் மோடி  ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரையுமே  சந்திப்பதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் பரவுகிறது.   பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.   ஆனால் யாரையும் சந்திக்க அனுமதி கிடைக்காததால் சென்னை திரும்பி விட்டார்.   தற்போது சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி  நிச்சயம் சந்தித்து பேசுவார் என்று முன்னாள் அதிமுக ஜெயக்குமார் உள்பட எடப்பாடி ஆதரவாளர்கள் பலரும் சொல்லி வருகின்றனர்.