வயிறு எரியாது; மனம் குளிரும்! உதயநிதிக்கு பாஜக பதிலடி

 
u

நானும் ஒரு கிறிஸ்துவன் தான் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.  உதயநிதி கிறிஸ்துவன் என்று சொல்கிறார் என சிலருக்கு நிச்சயம் வயிறு எரியத்தான் செய்யும் என்று பேசி இருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  இதற்கு  வயிறு எரியாது குளிரவே செய்யும் என்று பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.

சென்னையில் மண்ணடி பிரகாசம் சாலையில் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது.   திமுக சார்பில் 2000 பேருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.   இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

kr

 இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி பேசும் போது,  சிலருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்திருக்கிறது.  திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் சொல்கிறேன்.   இந்து அறநிலையைத் துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு இப்போது இங்கு அல்லேலூயா என்று கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வது தான் திராவிட மாடல் ஆட்சி.  அவர் எப்போதுமே மாலையும் கழுத்துமாகத்தான் இருப்பார்.  ஆனால் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கு செல்வார்.  இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார் இதற்கு. இதற்கு  பெயர்தான் சமூக நீதி கட்சி.

 இதைத்தான் பெரியார் ,அண்ணா, கலைஞர், அன்பழகன் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.   இந்த ஆட்சியை தான் இப்போதைய முதல்வரும் நடத்தி வருகிறார் என்றவர் மேலும்,   இன்னும் சொல்லப்போனால் நானும் ஒரு கிறிஸ்துவன் தான்.  கிறிஸ்துவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். சேகர் பாபு அல்லேலூயா சொல்கிறார்.  உதயநிதி கிறிஸ்தவர் என்று சொல்கிறார் என்று சிலருக்கு நிச்சயம் வயிறு எரியவே செய்யும் என்றவர், 

 நான் இஸ்லாமியரும் கூட,  நான் படித்தது எழும்பூரில் இருக்கும் கிறிஸ்தவ பள்ளி .  லயோலா கல்லூரியில் தான் பிடித்தேன்.   நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்தான்.  அந்த உரிமையில் இங்கே வந்து பேசுகிறேன் என்று கூறிய கூறியிருந்தார். 

 கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று சொல்லும் உதயநிதி,  நான் இந்து என்று மட்டும் ஏன் சொல்லவில்லை என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. 

இந்நிலையில் சிலருக்கு நிச்சயம் வயிறு எரியவே செய்யும் என்று உதயநிதி சொன்னதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

’’இல்லை. அனைவரின் மனமும் குளிரும். இப்படி ஒரு 'மதவாதி' ஹிந்துவாக இல்லையே என்பதில் மகிழ்ச்சியே’’ என்று கூறியிருக்கிறார்.