அதிகாரமில்லை; மரியாதை இல்லை; தினம் மன உளைச்சல் - புலம்பும் முதல்வர் ரங்கசாமி

 
ர்

நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராக இருந்தபோது ஆளுநராக இருந்தார் கிரண்பேடி.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வழங்காமல் ஆளுநர் குடைச்சல் கொடுத்து வந்ததால் நாராயணசாமி சாலையில் படுத்தும் தூங்கும் போராட்டம் வரைக்கும் நடத்திப் பார்த்தார்.   தற்போது ரங்கசாமி புதுச்சேரியின் முதல்வராக இருக்கிறார்.  துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளார்.  இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற சர்ச்சை வெடித்திருக்கிறது.  இதனால் தினமும் மன உளைச்சல் தான்  என்று கவலையுடன் தெரிவித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

 புதுச்சேரி மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் சட்டப்பேரவை களாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்கள்.   இந்த மனுவை பெற்றுக் கொண்ட பெற்றுக்கொண்டு முதல்வர் ரங்கசாமி சமூக அமைப்பினரிடம் பேசிய போது,   மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகத்தை ஆளுவதில் சிரமம் இருக்கிறது.  ஆளுபவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.   யாருக்காவது ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்றால் முடியவில்லை.  தினமும் மன உளைச்சல் தான் இதனால் ஏற்படுகிறது.

ன்

 தலைமைச் செயலாளர்,  துணைச் செயலாளர்களை வைத்து பேசும்போது ஒவ்வொரு கருத்து வரும்.  அப்போது எதுவும் செய்ய முடியவில்லை என்ற நிலையும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒன்றும் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது . அதிகாரம் வேண்டும் என்று ரங்கசாமி துடிக்கின்றார் என்று பலர் கேலி பேசுகிறார்கள்.  யாருக்காக அதிகாரம் வேண்டும் என கேட்கிறேன்.   இனி பின்னால் வருபவர்கள் என்னென்ன சிரமத்தை சந்திக்க போகிறார்கள் என்பதை தான் நான் எடுத்துக்காட்டுகிறேன் .

இன்றைக்கு நான் அனுபவிக்கிறேன்.  ஏற்கனவே ஏதாவது செய்து கொடுத்தார்களா?  கடந்த ஆட்சியில் ஆளுநருக்கு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு தான் அதிகாரம் என்று உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவான சொன்ன பிறகு நமக்கு ஒன்றுமே இல்லை மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.  எனக்கு தெரியாமலேயே அதிகாரிகள் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடுகின்றார்கள் என்று வேதனையை தெரிவித்திருக்கிறார்.

ட்

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி என்ற செய்தியாளர்களை சந்தித்தபோது,  கடந்த ஆட்சி காலத்தில் மாநில அந்தஸ்து கூறிய நாங்கள் டெல்லி சென்று போராட்டம் நடத்திய போது ரங்கசாமி எங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.  கிரண்பேடிக்கு எதிராக போராடிய போதும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ரங்கசாமி இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 அவர் மேலும்,  ரங்கசாமிக்கு பாஜக ஒத்துழைக்கவில்லையா? மத்திய அரசுக்கு ரங்கசாமி என்ன அழுத்தம் கொடுத்தார்? இப்போது புலம்ப என்ன காரணம்? மத்திய அரசை எதிர்த்து மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை வலியுறுத்தி தெருவில் இருந்து இறங்கி போராடுவாரா? ஆதங்கத்தை பேசி என்ன பயன் ? முதலமைச்சராக இருக்க ரங்கசாமி தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். 

 இதற்கிடையில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா,   இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தனது உண்மை முகத்தை காட்டி போராட்ட களத்தில் குதித்தால் நாங்கள் ஆதரவளிப்போம் என்று தெரிவித்திருக்கிறார். 

 இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன்,   முதல்வரின் பேச்சு இப்போது இருக்கும் மத்திய அரசு செய்யவில்லை என்று சொல்லவில்லை.  கடந்த ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் செய்யவில்லை என்று தான் பேசுகின்றார்.  எங்களை பொறுத்தவரை இந்த விவகாரத்தை இங்கே பேசுவதை விட பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட்டு தான் தீர்வு காண வேண்டும் என்கிறார்.