என் வாழ்நாளில் இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டேன்... நிதிஷ் குமார் உறுதி

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

என் வாழ்நாளில் இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கூறியதாவது: பா.ஜ.க. சமூகத்தில் மோதலை உருவாக்க மட்டுமே செயல்படுகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் வாழ்நாளில் இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டேன். நான் சமாஜ்வாதிகளுடன் (சோசலிஸ்டுகள்) இருந்து கொண்டு பீகாருடன் சேர்ந்து நாட்டை முன்னேற்றுவேன். 

பா.ஜ.க.

1998ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானபோது என்னைத்தான் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுத்தார் என்பதை அவர்கள் (பா.ஜ.க.) மறந்து விட்டார்கள். எனக்கு மூன்று அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டன. லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். இன்று மையத்தில் அமர்ந்திருப்பவர்களும் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் திமிர்பிடித்தவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாஜ்பாய்

பீகாரில் நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன், பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ்  மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அம்மாநிலத்தில் 10வது முறையாக ஆட்சி அமைத்தார். அது முதல் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.