சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது... பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

 
சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்…….. நிதிஷ் குமார் கருத்து…..

சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி அரசாங்கம் மாநில சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் சட்டப்பேரவையில் உரையாற்றினர். முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. இன்று டெல்லிக்கு வெளியே நடப்பதெல்லாம் விளம்பரம். 2017ல் பாட்னா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அந்தஸ்து கோரியபோது, யாரும் அதை கவனிக்கவில்லை. இப்போது நீங்கள் (மத்திய பா.ஜ..க அரசு) உங்கள் வேலையை விளம்பரப்படுத்த அதையே செய்வீர்கள். 

பா.ஜ.க.

பத்திரிகைகள் கூட சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. மாற்றத்தை ஏற்படுத்த நாம ஒன்றிணைந்து போராட வேண்டும். பீகாரின் வளர்ச்சிக்கா நாங்கள் (ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம்) இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம்.  நாடு முழுவதிலும் உள்ள தலைவர்கள் என்னை அழைத்து இந்த முடிவுக்கு (பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வௌியேறி மெகா கூட்டணியில் இணைந்தது) வாழ்த்து தெரிவித்தனர். 2024 மக்களவை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ்

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உரையாற்றுகையில், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே முடிவில்லாத கூட்டணி அமையும். இது மிக நீண்ட இன்னிங்ஸாக இருக்கும். இந்த கூட்டணி பீகார் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும். இந்த முறை யாரும் ரன் அவுட் ஆகவில்லை. மாநிலத்தில் பா.ஜ.க. பயப்படும்போது அல்லது தோல்வியடையும் போது, அது சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகிய 3 ஜாமைகளை முன்னிறுத்துகிறது. நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது  பா.ஜ.க. எனக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடுகிறது. நீரவ் மோடி போன்ற மோசடி செய்பவர்கள் தப்பி ஓடும்போது அவர்கள் எதுவும் செய்வதில்லை என தெரிவித்தார்.