சுதந்திர போராட்டத்தின் உண்மையான வரலாற்றைத் துடைத்து விட்டு புதியவற்றை எழுதுவார்கள்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கிய நிதிஷ்

 
ஆர்.எஸ்.எஸ்.

சுதந்திர போராட்டத்தின் உண்மையான வரலாற்றைத் துடைத்து விட்டு புதியவற்றை எழுதுவார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தாக்கியுள்ளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில்  நிதிஷ் குமார் பேசியது தொடர்பான வீடியோ ஒன்றை அந்த கட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில்  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு 75வது சுதந்திர  தினத்தை முன்னிட்டு அறிவித்த சுதந்திர தின அமுத பெருவிழா என்ற 18 மாத கொண்டாட்டங்களை கேலி செய்தார். அந்த வீடியோவில் நிதிஷ் குமார், அவர்கள் பயன்படுத்திய பெயர் என்ன? சுதந்திர தின அமுத பெருவிழா. அமுத சுதந்திர போராட்டத்தின் தலைவர் யார்? அது பாபு (மகாத்மா காந்தி) எனவே அவர்கள் இதை பாபு பெருவிழா என்று அழைத்திருக்கலாம்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

அவர்கள் என்ன சொல்ல முயல்கிறார்கள்? அவர்கள் சுதந்திர போராட்டத்தின் அங்கத்தினர்களா? இன்று ஆர்.எஸ்.எஸ். வலுப்பெற்று வருகிறது. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் ஆர்.எஸ்.எஸ். சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததா?. பாபு (மகாத்மா காந்தி) கொல்லப்பட்டார். ஏன்?. ஏனென்றால் அவர் இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.  தயவு செய்து அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) எந்த மாதிரியான வேலையில் ஈடுபட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள். 

மகாத்மா காந்தி

அவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதாக சொல்ல விரும்புகிறார்களா? இதெல்லாம் வெறும் பாசாங்கு. அவர்களால் முடிந்தால், சுதந்திர போராட்டத்தின் உண்மையான வரலாற்றைத் துடைத்து விட்டு புதியவற்றை எழுதுவார்கள். தேசத் தந்தை மகாத்மா காந்தியும் ஒதுக்கித் தள்ளப்படும் ஒருநாள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பாபுவை கொன்றவனுக்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். நான் அவர்களுடன் (பா.ஜ.க. கூட்டணியில்) இருந்தேன், அதனால் ஒரு நான் வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் தயவு செய்து இதை அறிந்து கொள்ளுங்கள், இந்த அர்த்தமற்ற முட்டாள்தனத்தை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.