நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி.. நிதிஷ் குமார் எச்சரிக்கை

 
நிதிஷ் குமார்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று முஸ்லிம் தலைவர்களிடம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.

2022 பீகார் சட்டப்பேரவை தேர்தலின் போது, சீமாஞ்சல் பகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பல வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் அந்த பகுதியில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தது. இது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்தது. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் இதே போல் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புதிய வியூகத்தை தொடங்கியுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முஸ்லிம் அறிவுஜீவிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அறிவுஜீவிகள் கலந்து கொண்டனர். அதேசமயம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.

அந்த கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக முஸ்லிம் அறிவுஜீவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்

என்னை பொறுத்தவரை அவர் (அசாதுதீன் ஓவைசி) பா.ஜ.க.வின் பி டீம். வகுப்புவாத சூழலை அழிக்க அசாதுதீன் போன்ற தலைவர்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களை பேசுகின்றனர். இது முஸ்லிம் வாக்குகள் பிரிவதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் பீகாரில் முஸ்லிம்களின் முன்னேற்றம் மற்றும்  மேம்பாட்டிற்காக கடந்த 18 ஆண்டுகளாக தனது  அரசாங்கம் எவ்வாறு பாடுபட்டுள்ளது என்பதையும் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.