மாநிலங்களவைக்கு நான் செல்கிறேன் என்ற செய்தியை படித்ததும் ஆச்சரியப்பட்டேன்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

 
கோட்டாவிலிருந்து பீகார் மாணவர்களை அழைத்து வாங்க… இல்லைன்னா 5 லட்சம் ஓட்டு கிடைக்காது.. நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க. அட்வைஸ்..

மாநிலங்களவைக்கு நான் செல்கிறேன் என்ற செய்தியை படித்ததும் ஆச்சரியப்பட்டேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முதல்வர் நிதிஷ் குமாரிடம், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உங்களை பா.ஜ.க. அனுப்ப விரும்பினால் உங்கள் நிலைப்பாடு என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நிதிஷ் குமார், மாநிலங்களவை செல்ல வேண்டும் என்ற தனது ஆசை இன்னும் நிறைவேறவில்லை என்று தெரிவித்தார். மேலும் அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பத்திரிகையாளர்கள் மாநிலங்களவை செல்வதற்கான எனது ஆர்வத்தை பற்றி கேட்டனர். அதில் எனக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லை என்று நான் அவர்களுக்கு பதிலளித்தேன் என்று நிதிஷ் குமார் விளக்கம் கொடுத்தார்.

பா.ஜ.க.

நிதிஷ் குமாரின் இந்த கருத்து பீகார் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரை பா.ஜ.க. துணை குடியரசு தலைவராக நியமனம் செய்து, பீகாரில் பா.ஜ.க.வை சேர்ந்தவரை முதல்வராக நியமிக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மாநிலங்களவை செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள செய்திகள் வெளியான.

நாடாளுமன்றம்

இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறுகையில், அவர்கள் (பத்திரிகை) எதையும் வெளியிடுகிறார்கள், அதை படித்தபோது நானும் ஆச்சரியப்பட்டேன் என்று தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், பீகார் அமைச்சருமான சஞ்சய் குமார் ஜா டிவிட்டரில், நிதிஷ் குமார் எங்கும் செல்லவில்லை, பீகார் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வார் என்றும் பதிவு செய்துள்ளார்.