காங்கிரஸ் கட்சியில் சேருவதை விட கிணற்றில் குதித்து சாவேன்... நிதின் கட்கரி

 
வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

மாணவர் தலைவராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியில் சேருவதை விட கிணற்றில் குதித்து சாவேன் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடம் தெரிவித்ததாக மத்திய நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: நான் மாணவர் தலைவராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீகாந்த் ஜிக்சர் என்னிடம் பேசினார். அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர், உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கிறது ஆனால் நீங்கள் கட்சியில் இருக்கிறீர்கள். காங்கிரஸில் சேருங்கள் என்று என்னிடம் ஸ்ரீகாந்த் ஜிக்சர் கூறினார். 

ஸ்ரீகாந்த் ஜிக்சர்

அதற்கு நான் அவரிடம், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எனக்கு பிடிக்காததால் அந்த கட்சியில் சேருவதை விட கிணற்றில் குதித்து சாவேன். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிவித்தேன். முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் சுயசரிதையில் உள்ள வாக்கியத்தை இளம் தொழில்முனைவோர் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு நபர் தோற்கடிக்கப்பட்டால் அவர் முடிவதில்லை, ஆனால் அவர் முயற்சியை விடும்போது அவர் முடிந்துவிடுகிறார். 

காங்கிரஸ்

வணிகம், சமூகப்பணி அல்லது அரசியலில் இருப்பவர்களுக்கு மனித உறவுதான் மிகப்பெரிய பலம். எனவே ஒருவரை பயன்படுத்தி விட்டு கழட்டி விடுதல் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது. நல்ல நாட்களாக இருந்தாலும் சரி,  கெட்ட நாட்களாக இருந்தாலும் சரி, யாருடைய கையையும் பிடித்தால் அதை எப்போதும் பிடித்துக் கொள்ளுங்கள். உதய சூரியனை வணங்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.