காங்கிரஸ் கட்சி வலுப்பெற வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான விருப்பம்... மத்திய பா.ஜ.க. அமைச்சர் பேச்சு

 
காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான விருப்பம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகை விருது விழாவில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: ஜனநாயகம் இரண்டு சக்கரங்களில் இயங்குகிறது - ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி. ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. எனவே காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான விருப்பம். 

வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

மேலும் பலவீனமடைந்துள்ள நிலையில், அதன் இடத்தை பிராந்திய கட்சிகள் கைப்பற்றி வருகின்றன, இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எனவே எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும். நான் ஒரு தேசிய அரசியல்வாதி, இந்த நிலையில் மகாராஷ்டிரா (மாநில அரசியல்) வருவதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு காலத்தில் நான் குறிப்பாக தேசிய அரசியலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இப்போது அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நம்பிக்கை சார்ந்த அரசியல்வாதி, குறிப்பிட்ட லட்சியத்தை கொண்டவன் அல்ல.

காங்கிரஸ்

காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று முழு மனதுடன் வாழ்த்துகிறேன். காங்கிரஸ் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் கட்சியில் தொடர்ந்து தங்களுடைய நம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) தோல்வியைக் கண்டு விரக்தியடையாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தோல்வி இருந்தால் ஒரு நாள் வெற்றியும் உண்டு. நான் பிரதமர் போட்டியில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.