நூறு பாவங்களை செய்தபின், பூனை மியாவ் மியாவ் செய்ய அயோத்திக்கு செல்கிறது.. தாக்கரேவை கிண்டல் செய்த பா.ஜ.க.

 
ஆதித்யா தாக்கரே

நூறு பாவங்களை செய்தபின், பூனை மியாவ் மியாவ் செய்ய அயோத்திக்கு செல்கிறது என ஆதித்யா தாக்கரேவின் அயோத்தி பயணத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ. கிண்டல் செய்துள்ளார்.

சிவ சேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே. 32 வயது இளைஞரான ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிரா சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார். சிவ சேனா ஆதித்யா தாக்கரேவை வருங்கால தலைவராக முன்வைக்கிறது. மேலும் அவரை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளையும் சிவ சேனா மேற்கொண்டு வருகிறது.

நிதேஷ் ரானே

ஆதித்யா தாக்கரே நேற்று முதல் முறையாக தனியாக உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். முன்னதாக ஆதித்யா தாக்கரேவின் அயோத்தி பயணத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே கிண்டல் செய்துள்ளார். நிதேஷ் ரானே டிவிட்டரில், நூறு பாவங்களை செய்தபின், பூனை மியாவ் மியாவ் செய்ய அயோத்திக்கு செல்கிறது என பதிவு செய்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்

ஆதித்யா தாக்கரேவை மியாவ் என்று ரானே குறிப்பிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த டிசம்பரில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை கட்டிட வளாகத்துக்குள் ஆதித்யா தாக்கரே நுழையும் போது, நிதேஷ் ரானே பூனை என்று அழைத்தார். இதனையடுத்து சிவ சேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே பெரும் சண்டை எழுந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ. கருத்துக்காக அவர் கண்டிக்கப்படுவார் என்று கூறியிருந்தார். இதனால் அந்த பிரச்சினை அப்போது முடிவுக்கு வந்தது.