உணவு பொருட்களுக்கு வரி.. ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பே மாநிலங்கள் செய்துள்ளன.. நிர்மலா சீதாராமன் பதிலடி

 
வாங்குன கடனுக்கு வட்டி மட்டும் ஒரு மாதம் தள்ளுபடி! அசல மறக்காம குடுத்துடுங்க- நிர்மலா சீதாராமன் 

உணவு பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவது இது முறையல்ல. ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வருவதற்கு  முன்பே மாநிலங்கள் உணவு தானியங்கள் மூலம் கணிசமான வருவாயை சேகரித்தன என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட ஆட்டா, பன்னீர், தயிர், அரிசி உள்ளிட்ட சில்லறை உணவுப்  பொருட்கள் மீது 5% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி கடந்த திங்கட்கிழமை (ஜூலை 18) முதல் அமலுக்கு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பாக்கெட் தயிர்

அதேசமயம், வரி விதிப்பு நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயப்படுத்தியுள்ளார்.  இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் இது போன்ற உணவு பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறையா? இல்லை. ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வருவதற்கு  முன்பே மாநிலங்கள் உணவு தானியங்கள் மூலம் கணிசமான வருவாயை சேகரித்தன. 

ஜி.எஸ்.டி.

பஞ்சாப் மட்டும் உணவு தானியத்தின் மீது கொள்முதல் வரி வாயிலாக ரூ.2 ஆயிரம் கோடி வசூலித்தது. உத்தர பிரதேசம் ரூ.700 கோடி வசூலித்தது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது, பிராண்டட் தானியங்கள், பருப்பு வகைகள், மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. பின்னர் இது திருத்தப்பட்டது. பதிவு செய்யப்பட்ட பிராண்ட் அல்லது பிராண்ட் கீழ் விற்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது என பதிவு செய்துள்ளார். மேலும் பல கருத்துக்களை டிவிட்டரில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார்.