நாடே இல்லாத ராஜாவுக்கு ஒன்பது மந்திரிகளாம் -ஓபிஎஸ்ஐ விளாசும் ஜெயக்குமார்

 
j

இல்லாத நாட்டுக்கு ஒன்பது அமைச்சர்கள் போல் தான் இருக்கிறது ஓபிஎஸ்சின் செயல்பாடுகள்.   ஓபிஎஸ்க்கே அதிமுகவில் பதவி இல்லை.  ஆனால் பண்ருட்டி  ராமச்சந்திரனுக்கு பொறுப்பு வழங்குகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான ஜெயக்குமார்.

o

 ஆதித்தனாரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஜெயக்குமார்.  அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர்.

 பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் ஆலோசகராக ஓ. பன்னீர்செல்வம் நியமனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் .  அதற்கு ஜெயக்குமார்,  இல்லாத நாட்டுக்கு 9 மந்திரிகள் போல் தான் இருக்கிறது ஓபிஎஸ் செயல்பாடுகள்.  ஓபிஎஸ்க்கே அதிமுகவில் பதவி இல்லை.   ஆனால் அவர் மற்றவர்களுக்கு பதவி வழங்குகிறார் .  நாடே இல்லாத ராஜாவுக்கு ஒன்பது மந்திரிகளாம் என்றார்.

 இதன்பின்னர்  ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி  வீட்டில் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு ,  போலீசார் யார் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும்.   ஓபிஎஸ் வீட்டிற்கு தானே?   ஓபிஎஸ் வீட்டிலிருந்து தானே ஜே. சி. டி பிரபாகர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்.  ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறார்கள் .  அப்படி என்றால் திமுகவும் ஓபிஎஸ்சும் கைகோர்த்து செயல்படுகின்றார்கள் என்று குற்றம் சாட்டினார்.