அடுத்த அட்டாக்! ரூ.345 மெஷினை 10 ஆயிரம் என்று புருடா விட்டாரா அண்ணாமலை?
345 ரூபாய் மதிப்பு கொண்ட காது கேளாதோருக்கான கருவியை 10,000 ரூபாய் என்று புருடா விட்டார் தமிழக பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
அண்ணாமலையின் ரபேல் வாட்ச் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் அவர் மீதான அடுத்த தாக்குதல் ஆரம்பமாகி இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால் உள்ளிட்ட உதாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை, காது கேட்க இயலாதோருக்கு வழங்கப்படும் சைபர் சோனி என்கிற நிறுவனத்தின் கருவி ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். அந்த கருவியை பாஜக சார்பில் உங்களுக்கு வழங்குகின்றோம் என்று கூறி இருக்கிறார். ஆனால் கொடுக்கப்பட்ட அந்த கருவியில் விலை வெறும் 345 ரூபாய் என்றும் , அது சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் தற்போது தெரிய வந்திருப்பதாக தகவல் பரவுகிறது.
1999 ரூபாய் மதிப்பு கொண்ட அந்த கருவியை 83 சதவிகிதம் தள்ளுபடி போக 345 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தற்போது அமேசான் தனது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், இதை வைத்து அண்ணாமலை பொய் சொல்லி இருக்கிறார் என்றும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.