புதிய சர்ச்சை! அனுமதி பெறாமல் லண்டன் சென்று வந்த ராகுல்

 
ra


பிரிட்ஜ் இந்தியா என்கிற அமைப்பின் சார்பில் லண்டனில் ‘இந்தியாவுக்கான சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் சர்வதேச சர்வதேச மாநாடு நடந்தது.  இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம். பி. ராகுல் , மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொயித்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஜா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.டி.ராம ராவ்   உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

gu

ஐரோப்பிய நாடான பிரிட்டன்  தலைநகர் லண்டனில்  நடந்த இந்த சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பங்கேற்றது போல் மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த திருச்சி சிவா எம்.பி. பங்கேற்கவில்லை.   பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுகவின் மீதிருந்த கோபத்தில் திமுகவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ராகுல் காந்திதான் ரத்து செய்தார்  என்று தகவல். இந்நிலையில், மத்திய அரசின் அனுமதி பெறாமல் ராகுல்காந்தி லண்டன் சென்று வந்திருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

ஒரு எம்பி வெளிநாட்டிற்கு பயணம் செல்வது என்றால் அதற்கு மத்திய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும்.  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தான் இதற்கான முன் அனுமதி வழங்கும் . எம்பியின் பயண விவரம் குறித்த தகவலை பயணம் செல்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமைச்சர்கள் தங்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடும்.  

l

 அதேபோன்று வெளிநாட்டு அரசாங்கங்கள், வெளிநாட்டு அமைப்புகள் உள்ளிட்டவை இந்திய எம்பி தங்கள் நாட்டிற்கு, அமைப்பிற்கு அழைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமே அழைப்பு விடுக்க வேண்டும்.   நேரடியாக எம்பி அழைக்கப்படும் பட்சத்தில் அந்த அழைப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தி மத்திய அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.  ஆனால்,   காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது இங்கிலாந்து பயணம் தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து உரிய அனுமதியை பெறவில்லை என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது .

மத்திய அரசிடம் இருந்து  அனுமதி பெறாமல் இங்கிலாந்து சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்,  இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் குறித்தும்,  பாஜக தலைமையிலான மத்திய அரசு குறித்தும் லண்டனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.   இந்த நிலையில் ராகுல் காந்தி மத்திய அரசின் அனுமதி பெறாமலேயே லண்டன் சென்று வந்திருக்கிறார் என்ற தகவல் மேலும் சர்ச்சையை கூட்டியிருக்கிறது.