அந்த ரகசிய கூட்டம் பற்றி கவலையில்லை; கத்தரி முத்தினா சந்தைக்கு வந்துவிடும் - கே.என்.நேரு

 
k

அந்த ரகசிய கூட்டம் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.   கத்தரி முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும் என்கிறார் அமைச்சர் கே. என். நேரு.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார்.   இதை அடுத்து கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஈரோட்டில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது.

e

 தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இந்த பணிமனையை  திறந்து வைத்தார்.  அதன் பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் சந்தித்தபோது,  திமுக கூட்டணி கட்சிகள் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் தலைவர் ஸ்டாலினை விட்டுக் கொடுத்தது கிடையாது.    கூட்டணி கட்சிகள் திமுகவில் முழு ஒத்துழைப்போடு பணி புரிந்து வருகிறது என்றவர்,

 காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவதற்காக பணியாற்றுவதாக கூட்டணி கட்சிகள் உறுதி அளித்திருக்கிறார்கள்.   இதனால் இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி அடையும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று சொன்னவர்,   அதிமுக ஈரோட்டில் ரகசிய கூட்டம் நடத்தி வருகிறது. அவர்களால் வெளிப்படையாக கூட்டம் போட முடியவில்லை .  இருந்தாலும் பரவாயில்லை வெளியில் வந்து தானே ஆக வேண்டும்.   கத்தரி முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.   ரகசிய கூட்டம் போட்டுவிட்டு எங்களிடம் வரட்டுமே.  அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.