நேரு சிகரெட் பிடித்தார்; மது அருந்தினார்... பறந்தது இமெயில் - மேலிட விசாரணையில் அழகிரி

 
ன்

நேருவைப் பற்றி வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் கே. எஸ். அழகிரி. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அழகிரி பேசியதின் அர்த்தம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 சென்னை சத்தியமூர்த்தி பவனில், ‘அரசியல் அமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம்’ என்கிற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்திருக்கிறது.   இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி,  நாடு விடுதலை பெற்றதும் யார் பிரதமர் என்கிற கேள்வி எழுந்தது.  அப்போது காந்தி வழியை பின்பற்றுபவர் தான் பிரதமராக தேர்வு ஆவார் என்று காங்கிரஸ் நம்பியது.  சர்தார் வல்லபாய் படேலுக்கும் அப்போது செல்வாக்கு இருந்தது. 

ப்

 நேரு அடிக்கடி வெளியூர் பயணம் சென்றார். சிறை வாழ்க்கையை சந்தித்தார்.   இதனால் மனைவிக்கு நல்ல கணவராக இருக்க முடியவில்லை.  அவர் இந்திய கலாச்சாரத்திற்கு புறம்பான பழக்க வழக்கங்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்கிறார்.  அந்த நேரத்தில் நேருவா? படேலா? எல்லாம் என்கிற குழப்பத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

 பின்னர் தேச நலன் கருதி நேருவை பிரதமராக தேர்வு செய்துள்ளார் காந்தி.  அதன் பின்னர் பட்டேல் இடம் பேசி அவருடைய ஒப்புதலையும் பெற்று இருக்கிறார்.  இப்படி நேரு குறித்து அழகிரி பேசிக் கொண்டிருந்தபோது,  ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு எழுந்திருக்கிறது.  அழகிரி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விஷ்ணு பிரசாத் எம்பி வெளிநடப்பு செய்திருக்கிறார். 

வ்

 தனது அரசியல் வாழ்க்கை குறித்து காந்திக்கு நேரு எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைத் தான் நான் சொன்னார்.  அந்த தகவல்களை மேற்கோள் காட்டித்தான் பேசினார்.  மற்றபடி நேருவை தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை என்று அழகிரி ஆதரவாளர்கள் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து வருகிறார்கள். 

 ஆனால் விஷ்ணு பிரசாத் எம்பி இதில் திருப்தி அடையவில்லை . அவர்  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இமெயிலில் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார். 

 அந்த கடிதத்தில்,   நேரு சிகரெட் பிடித்தார் மது அருந்தினார் என்று நேருவின் தனிப்பட்ட குணங்களை விமர்சித்து பேசினார் அழகிரி.  கட்சி மேடையில் நேருவின் குடும்பத்தை களங்கப்படுத்தி இருந்தார்.  இதனால் ஆலோசனைக்கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

 இந்த ஈமெயில் கடிதத்தை அடுத்து,  காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ்,  ஸ்ரீ வல்லபிரசாத் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது? அழகிரி பேசியதன் அர்த்தம் என்ன ? என்பதை பற்றி மாவட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள் என்று தகவல்.