பா.ஜ.க.வை முதுகில் குத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே எங்களிடம் கொள்கைகளை பற்றி பேசக்கூடாது.. நவ்னீத் ரானா

 
 ரவி ரானா மற்றும் நவ்னீத் ரானா

பா.ஜ.க.வை முதுகில் குத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே எங்களிடம் கொள்கைகளை பற்றி பேசக்கூடாது என நவ்னீத் ரானா ஆவேசமாக தெரிவித்தார்.

அமராவதி மக்களை தொகுதி உறுப்பினர் நவ்னீத் ரானாவும், அவருடைய கணவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் கீர்த்தனைகள் பாட போவதாக தெரிவித்தனர். ஆனால் திட்டத்தை பின்னர் கைவிட்டு விட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏப்ரல் 23ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றம் பெயில் வழங்கியதையடுத்து மே 5ம் தேதி ரானா தம்பதியினர் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இதனையடுத்து நவ்னீத் ரானா தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உத்தவ் தாக்கரே

இந்நிலையில், நவ்னீத் ரானாவும் அவரது கணவர் ரவி ரானாவும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நவ்னீத் ரானா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வை முதுகில் குத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே, ரானாக்களிடம் கொள்கைகளை பற்றி பேச மற்றும் கற்றுக் கொடுக்க கூடாது. இன்று (நேற்று) டெல்லி சென்று பெண்களை மதிக்கும் அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம். நான் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை சபாநாயகரை சந்தித்த, லாக்கப்பில் இருந்து சிறை வரை நாங்கள் எப்படி மோசமாக நடத்தப்பட்டோம் என்பதை அவர்களிடம் கூற உள்ளேன்.

பிரதமர் மோடி

நான் அதை பற்றி புகார் செய்யப் போகிறேன். நாங்கள் அதற்கு எதிராக இங்கே புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பிரச்சினையை எழுப்ப செல்கிறேன். குற்றம் பற்றி நாங்கள் பேசவில்லை. அது எங்களுக்கு எதிராக எப்படி பதிவு செய்யப்பட்டது. லாக்கப்பில் இருந்து சிறை வரை நான எவ்வாறு மோசமாக நடத்தப்பட்டேன் மற்றும் எனது உடல் நல பிரச்சினைகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பதை பற்றி நாங்கள் பேசினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.