தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்த ஜெய்வீர் ஷெர்கில்.. காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவு

 
ஜெய்வீர் ஷெர்கில்

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை ஜெய்வீர் ஷெர்கில் ராஜினாமா செய்துள்ளது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் மிகவும் முக்கியமான நபர் ஜெய்வீர் ஷெர்கில். பஞ்சாப் காங்கிரஸின் இளைய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும், பஞ்சாப் காங்கிரஸ் சட்ட பிரிவு இணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக  செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த ஜெய்வீர் ஷெர்கில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.

சோனியா காந்தி

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை ஜெய்வீர் ஷெர்கில் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஜெய்வீர் ஷெர்கில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், முடிவெடுப்பது இனி பொது மற்றும் நாட்டின் நலன்களுக்காக அல்ல, மாறாக அது முகஸ்தியில் ஈடுபடும் தனிநபர்களின் சுய நலன்கள் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் கள யதார்த்தத்தை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுவது எனக்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை  ஜம்மு காஷ்மீர் பிரசாரக் குழு தலைவராக காங்கிரஸ் தலைமை நியமனம் செய்தது. ஆனால்  அடுத்த சில மணி நேரத்திலேயே அப்பதவியை குலாம் நபி ஆசாத்  ராஜினாமா செய்தார்.  அதற்கு அடுத்த சில தினங்களில் இமாச்சல பிரதேச காங்கிரஸின் வழிகாட்டு குழுவின் தலைவர் பதவியை ஆனந்த் சர்மா ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை ஜெய்வீர் ஷெர்கில் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பதவியை உதறுவது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.