ஷபானா ஆஷ்மி போன்றவர்கள் நாட்டை துண்டாட நினைக்கும் கும்பலின் ஏஜெண்டுகள், ஸ்லீப்பர் செல்... நரோட்டம் மிஸ்ரா தாக்கு

 
ஷபானா ஆஷ்மி

ஷபானா ஆஷ்மி போன்றவர்கள் நாட்டை துண்டாட நினைக்கும் கும்பலின் ஏஜெண்டுகள், ஸ்லீப்பர் செல் என்று மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடுமையாக தாக்கினார்.

2002ம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பனோ கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில் அண்மையில் 11 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் தெரிவித்து தெரிவித்தனர். பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மியும் இதனை விமர்சனம் செய்து இருந்தார்.

பில்கிஸ் பானோ வழக்கில் விடுதலையானவர்கள்

ஷபானா ஆஷ்மி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பில்கிஸ் பானோ தைரியத்தை இழக்கவில்லை. அவர் எல்லா வழிகளிலும் போராடினார். அவர் இந்த நபர்களை குற்றவாளியாக்கினார். மேலும் அவரது கணவர் சொல்வது போல், அவர் தனது வாழ்க்கையை ஒன்றாக இணைக்கும் போது, இந்த நீதியின் கேலிக்கூத்து நடந்தது என தெரிவித்தார். இதனையடுத்து ஷபானா ஆஷ்மியை மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் எப்போதுமே தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.. அவர்களால் அரசியல் மட்டுமே செய்ய முடியும்.. நரோட்டம் மிஸ்ரா
மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க. அல்லாத மாநிலத்தில் குற்றங்கள் நடக்கும்போது இவர்கள் (ஷபானா ஆஷ்மி போன்றவர்கள்) ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஜார்க்கண்டில் மைனர் பெண் கொல்லப்பட்டபோது இவர்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள், உதய்பூர் கொலையை பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? ஏனென்றால் அவர்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே குற்றங்களை பார்க்கிறார்கள். இவர்கள் நாட்டை துண்டாட நினைக்கும் கும்பலின் ஏஜெண்டுகள் மற்றும் ஸ்லீப்பர் செல். விருதை திரும்ப கொடுப்பதை  தொடங்கியவர்கள் இவர்கள்தான் என்று தெரிவித்தார்.