"இது மாயாஜால பட்ஜெட்.. இது கார்ப்பரேட் பட்ஜெட்" - பொறிந்து தள்ளிய நாராயணசாமி!

 
நாராயணசாமி

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல அறிவிப்புகள் மக்கள் நலனுக்காக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். விவசாயிகளுக்கு இரட்டிப்பு தொகை கொடுப்போம் என்று சொன்னார்கள். அது கொடுக்கப்படவில்லை.

முதல்வரிடம் மழை நிவாரணம் குறித்துக் கேட்டவருக்குக் கொலை மிரட்டல்  விடுப்பதா?' - நாராயணசாமி காட்டம்! | narayanasamy slams puducherry cm  rangasamy

வேலைவாய்ப்பு உருவாக்குகிற திட்டம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துகிற திட்டம் என எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. சுமார் 25 லட்சம் கோடி பேர் வேலையில்லாமல் அவதிப்படும் நேரத்தில் 80 லட்சம் பேர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்பது வருத்தம் அளிக்கிறது. சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நடத்துபவர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறுகின்றனர்.  அவர்களுக்கு கடன் தேவையில்லை. மானியம் வழங்க வேண்டும். 

Union Budget 2022: 5 big challenges before Finance Minister Nirmala  Sitharaman | Union Budget 2022: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் உள்ள 5  முக்கிய சவால்கள்! | India News in Tamil

அதேபோல், சுற்றுலா துறைக்கும் மானியம் வழங்க வேண்டும். ஆனால் கடன் வழங்க ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளனர். வங்கிகளில் யார் வேண்டுமானாலும் கடன் வாங்கலாம். அதற்கு மத்திய அரசின் தயவு தேவையில்லை. ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கி, வங்கியிடம் கொடுத்துவிட்டு, வங்கிகளில் இருந்து மக்கள் கடன் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஓராண்டுக்கு 5 கோடி வீடு கட்டுங்கள். மொத்தம் இந்த பட்ஜெட் ரூ.38 லட்சம் கோடி. ரூ.27 லட்சம் கோடிதான் வருமானம். ரூ.11 லட்சம் கோடி அதாவது 35 சதவீதம் வெளிமார்க்கெட்டில் இருந்து கடன் வாங்குகின்றனர்.  

PM Modi Hails 'people-friendly And Progressive' Budget

தினமும் வருமானம் பார்ப்பவர்கள், அரசு ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை தான் லிமிட். அதற்குமேல் போனால் வரிவிதிப்பு. 7 ஆண்டுகளாக மோடி அரசு இதனை செய்யவில்லை. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட் மாயாஜால பட்ஜெட், மக்களை ஏமாற்றும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இதனால் இன்னும் பொருளாதார வீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவைதான் ஏற்படும்” என்றார்.