பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது - நாராயணசாமி

 
Narayanasamy

தமிழகத்தில் ஆதீனங்கள் அரசியலில் தலையிடுவதை, எந்த காலத்திலும் ஏற்று கொள்ள முடியாது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

 

 

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "இந்தியாவில் சாதி,மத பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. இதனால் பல பகுதியில் மத கலவரம் ஏற்படுகிறது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பாஜகவினர் தூண்டி விட்டு தான், நபிகள் குறித்து நூபுர் சர்மா விமர்சனம் செய்து உள்ளார். அவர் மீது பாஜக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய கருத்துக்கு பாஜக தலைவர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக நூபுர்சர்மா கூறி உள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக, வாய்மூடி இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் ஆதீனங்கள், அரசியலில் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் வாதிகள் போல பேசுகிறார்கள். அரசை விமர்சனம் செய்கிறார்கள். ஆதீனங்கள் மத கடமையை மட்டும் செய்ய வேண்டும். அரசியலில் தலையிடுவதை, எந்த காலத்திலும் ஏற்று கொள்ள முடியாது. இது இந்து மதத்திற்கு இழுக்கு ஏற்படும். ஆதீனங்கள் மத கடமையை மட்டும் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.