கட்சியின் ஒழுக்கத்தை மீறிவிட்டீர்கள்! காயத்ரி ரகுராமுக்கு நாராயணன் திருப்பதி பதில்

 
narayanan thirupathi

தமிழக பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருந்து வந்தார் நடிகை காயத்ரி ரகுராம்.

க்

 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டது முதல் அவருக்கும் இவருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது.  தொடர்ந்து அண்ணாமலையின் தலைமையை விமர்சித்து வந்த அவர், திமுகவுக்கு நெருக்கமானவர்களுடன் நெருங்கி பழகுவதாக கூறி அவரை அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார். இதையடுத்து அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை டிவிட்டரில் முன்வைத்த காய்த்ரி ரகுராம், கடந்த 2 தினங்களுக்கு முன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் அண்ணாமலையுடனான மோதல் முடிவுக்கு வந்த பாடில்லை.

இந்நிலையில் அவர் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதிக்கு காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், “அண்ணாமலை என்னை திமுக ஸ்லீப்பர் செல் என்று முத்திரை குத்துகிறார். இப்போது அவர் ஒழுக்கத்தை மீறவில்லையா? பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்
எனது எந்த நடவடிக்கை அல்லது எந்த ட்வீட் கட்சியின் ஒழுக்கத்தை மீறியது என்பதை அறிய எனக்கு உரிமை இல்லையா? 150 பேர் முன்னிலையில் என்னைப் பற்றிப் பேசிய அண்ணாமலை, என் குணாதிசயத்தைக் கொன்றாரா? பொய்யை மட்டும் சொல்லும் அண்ணாமலையின் பேச்சு மரபு மீறிய லட்சுமணன் கோட்டை தாண்டிய பேச்சாக உள்ளது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு டிவிட்டர் பதில் அளித்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “உங்கள் ஒழுக்கத்தைப் பற்றி நான் பேசவே இல்லை. நீங்கள் கட்சியின் ஒழுக்கத்தை மீறிவிட்டீர்கள் என்றுதான் கூறினேன். கட்சிக்கு எதிராக நீங்கள் ட்வீட் செய்திருந்ததால், விசாரணை தேவையில்லை. எனவே காரணம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எவருக்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்க உங்களுக்கு சுதந்திரம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.