தயாநிதிமாறன், செந்தில்பாலாஜிக்கு நாராயணன் திருப்பதி கொடுத்த பதிலடி
சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் திறந்ததாக புகார்கள் பறந்தன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு டிஜிசிஏ உத்திரவிட்டது. இந்த புகாரில் முதலில் பெயர்கள் வெளியிடப்படாத நிலையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்தான் அந்த நபர்கள் என்பது பரபரப்பான பேச்சு எழுந்தது.
தேஜஸ்வி சூர்யா எம் பி தான் கதவைத் திறந்தார். அவருக்கு அருகில் அண்ணாமலை அதை பார்த்துக் கொண்டிருந்தார் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த நிலையில் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டு விட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி இராதித்ய சிந்தியா தெரிவித்தார். அதன் பின்னர் தான் தேஜஸ்வி சூர்யா அவரோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அருகில் அமர்ந்து இருந்தது தெரியவந்தது.
அண்ணாமலையும் தேஜஸ்வியுடன் பயணம் செய்ததாக விளக்கியிருக்கிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று இண்டிகோ விமானத்தின் மூலம் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று இருக்கிறார்கள். இந்த விமானம் 10. 5 மணிக்கு புறப்பட வேண்டியது . ஆனால் 142 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது .
இதில் என்ன நடந்தது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி விமான கட்டுப்பாட்டு இயக்குனர் எம் டி ஜி சி உத்தரவிட்டிருக்கிறது. நடந்த அந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அண்ணாமலை, நானும் தேஜஸ்வி சூர்யாவும் பயணம் செய்தோம் . அந்த விமானத்தில் முன்னாடி இருக்கும் நாலு சீட்டு ஒன்றாக இருக்கும். தேஜஸ்வி எனக்கு முன்னால் இருக்கும் சீட்டில் இருந்தார்.
பத்து மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகத்தான் சென்றது. அவரை பார்க்க சிலர் வந்தனர். அடுத்தடுத்து பலர் வந்தனர். அதனால் தேஜஸ்வி சூர்யா எழுந்து எழுந்து அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது தேஜஸ் சூர்யா என்னிடம் சொன்னார். இங்கே கதவு திறந்து இருப்பது போல இருக்கிறது என்று சொன்னார். உடனே நாங்கள் புகார் அளித்தோம். பைலட் வந்து விசாரித்தார். என்ன நடந்தது என்று கேட்டார் . அதற்கு தேஜஸ்வினி நான் ஜன்னலை அட்ஜஸ்ட் செய்தேன் . அப்போது தவறுதலாக கை பட்டு விட்டது.
ஆனால் அதற்கு விமானத்தின் அவசர கதவு திறப்பது எல்லாம் இம்பாசிபிள் என்றால் உடனே அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடந்தது . அதன் பின் பொறியாளர்கள் அங்கு வந்து பார்த்தார்கள். மொத்தமாக கதவை திறந்து விட்டு மாற்றினார்கள். மீண்டும் பிரஷர் செய்யப்பட்டது. அங்கே என்ன நடந்தது என்று எழுதிக் கொடுக்கும் படி அவரிடம் கேட்டனர்.
தேஜஸ்மி சூர்யா கதவை திறக்கவில்லை வெறுமனே கை தான் பட்டது. இதை அடுத்து தன்னுடைய தவறில்லை என்றாலும் தேஜஸ்வி எம்பி என்பதால் பொறுப்பாக மன்னிப்பு கேட்டார். இவை விபத்தாக திறக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார் .
'நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன், ஆனால் நான் அதை திறக்க மாட்டேன், அது பயணத்திற்கும், பயணிகளுக்கும் நல்லதல்ல'
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) January 21, 2023
- இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த மாண்புமிகு மக்களவை உறுப்பினர் அண்ணன் @Dayanidhi_Maran அவர்கள். pic.twitter.com/cFRWluttw1
இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய நபர் எந்த அளவிற்கு பொய்யான செய்தியை எப்படி வெளியிட விடுகிறார் என்று பார்க்க வேண்டும். நேரத்திற்கு நேரம் மாற்றக்கூடாது. விமானத்தில் அவர்கள் ஏதோ கை வைத்தனர். அது மட்டும் தான் அங்கு நடந்தது . அவசர கால கதவு தவறுகள் திறக்கவில்லை விவசாயத் தெரிந்து விட்டது என்று கூறியிருக்கிறார், வெறுமனே கை வைத்தால் எல்லாம் கதவு திறக்காது வெறுமனே கை வைத்தது இவரின் கதவு எப்படி திறந்தது அரை மணி நேரம் தான் விமானம் தாமதமாக சென்று என்றும் பச்சையுப்பையை வேறு சொல்கிறார் கதவு திறக்கப்பட்டு எழுதி கொடுத்தது உண்மை என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் சொல்லிவிட்டார். ஆனால் இப்போது ஏன் அவர்கள் எல்லாம் விபத்து என்பது போல பொய் சொல்ல வேண்டும் தவறு செய்திருந்தால் தவறு என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டிருந்தார்.
அவர் மேலும், ஒரு வீடியோவை வெளியிட்டு 'நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன், ஆனால் நான் அதை திறக்க மாட்டேன், அது பயணத்திற்கும், பயணிகளுக்கும் நல்லதல்ல' - இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த மாண்புமிகு மக்களவை உறுப்பினர் அண்ணன் தயாநிதிமாறன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார் என்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
அதற்கு, ஓ ! அதை விமான நிறுவனமும். விமான போக்குவரத்து அமைச்சகமும் கவனித்து கொள்ளும். ஆனால், "நாங்கள் ஆட்சி பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், ஊழல் செய்ய மாட்டோம், அது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல" என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.