அப்படி வா வழிக்கு... பொறுக்கி என்று பேசி திரும்ப பெற்ற நாஞ்சில் சம்பத்

 
nஅ

பாஜகவினரை பொறுக்கி என்று பேசிய நாஞ்சில் சம்பத்தை அதற்கு மேல் பேசவிடாமல் பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.  இதனால் வேறு வழியின்றி நாஞ்சில் சம்பத் தான் பேசிய அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளாளர் கல்லூரியில் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.  அவர் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று பேசியவுடன் அரங்கத்தில் இருந்த பாஜகவினர் கொதித்தெழுந்தனர்.  

ச

வெள்ளாளர் கல்லூரியில் மக்கள் சபை என்னும் நிகழ்ச்சி நடந்தது.   மக்கள் சபை உரிமைக்காகவா வாக்குக்காகவா என்ற பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது.  இதில் நாஞ்சில் சம்பத் பேசும்போது பாஜகவினரை பொறுக்கி என்று குறிப்பிட்டு பேசினார் .  இதனால் அனைவரும் ஒத்து மொத்தமாக எழுந்து தங்களை எதிர்ப்பை பதிவு செய்தார்க.ள் நாஞ்சில் சம்பத் பேசியது தவறு அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  இதனால் நிகழ்ச்சிகள் பரபரப்பு ஏற்பட்டது.

 அரங்கம் முழுவதும் இருந்த மக்கள் நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்று மேடை ஏறியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாஞ்சில் சம்பத் பேசியது தப்பு என்றும்,  அந்த வார்த்தையை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறி மேடை ஏறி கோஷம் எழுப்பினர். பொறுக்கி பசங்க என்று திட்டினால் திட்டட்டடும். நாம பொறுக்கி முத்துக்கள் என்று காட்டுவோம் என்று பாஜக பிரமுகர் ஒருவர் கொதித்தெழுந்த பாஜகவினரை சமாதனப்படுத்தினார்.   அப்போதும் சமாதானம் ஆகாமல் நாஞ்சில்சம்பத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.  

ச்ச்

கடைசியில் வேறு வழியில்லாமல்  நான் பேசிய பொறுக்கி என்ற வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்தார்  நாஞ்சில் சம்பத்.

இதை பாஜகவினர் கைதட்டி, உரக்க குரல் எழுப்பி வரவேற்றனர்.   ‘’அப்படி வா வழிக்கு..’’என்று உரக்க குரல் எழுப்பினர்.

வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.